பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பொழுது புலர்ந்தது

அதிகாரம் உண்டா என்று கேட்டதற்கு ஆமாம் என்றும் கூறினர். ஆனல் கடைசி நேரத்தில் தேசிய சர்க்கார் கிடை யாது, வைஸி ராயின் நிர்வாக சபையில் சேனதிபதி தவிர மற்ற மெம்பர்கள் எல்லோரும் இந்தியராகச் செய்வோம், வைஸி ராய், இந்தியா மந்திரி, பார்லிமெண் டு இவர்கள் அதிகாரங்கள் எல்லாம் போர்முடிந்து புது அமைப்புத் தயாராகும்வரை அப்படியேதான் இருக்கும் என்று கடறி ஞர். பாதுகாப்பு விஷயமோ என்று கேட்டதற்கு காப் பிக்கடை காகிதம் பென்ஸில் போன்ற விஷயங்களேக் காட் டினர்.

இதைக்கொண்டு எந்த இந்தியனவது திருப்தி அடைய முடியுமா? காங்கிரஸ் மட்டுமா, சகல கட்சியா ரும் கிரிப்ஸ் திட்டத்தை வேண்டாம் என்று கூறினர்கள். அப்படியிருக்க காங்கிரஸ்மீது குறை கூறலாமா?

பிரிட்டிஷ் பத்திரிகையாகிய கல்கத்தா ஸ்டேஸ்மென் காரியம் கெட்டுப்போனதற்குக் காரணஸ்தர் காங்கிரஸ் காரர். அல்லர், கவர்ண்மெண்டாரே “ என்று கிரிப்ஸ் இங் தியாவைவிட்டுப் புறப்பட்டுப் போகுமுன்பே உண்மையை வெளியாக்கிற்று. அதல்ை அதுதான்காரணம் என்பதை அவரும் ஒப்புக்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அப்படியிருக்க அதைவிட்டு வேறு விபரீதமான காரணங் கள் கூறுவானேன் o

இரிப்ஸ் பல வருஷங்களாக இந்தியா விஷயத்தில் அனுதாபம் காட்டிவந்தவர் - நேரு முதலிய பல காங்கி ரஸ் தலைவர்களின் நண்பர் - இதற்குமுன் இந்தியாவுக்கு வந்தபொழுது ஜனங்களால் இராஜ உபசாரம் செய்யப் பெற்றவர் - இரண்டு வருஷங்களுக்குமுன் ஹிந்து முஸ் லிம் ஒற்றுமை ஏற்படாதவரை சுதந்திரமில்லை என்று கூறுவது தவறு என்று எழுதியவர் போரின் ஆரம்பத்