பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அவர்கள் நம்மை ஹிம்ஸிப்பதற்கு நாமே விருப்பம் கொண்ட கருவிகளாயிருக்கின்ருேம். அந்த ராஜாங்கத்தார் நாம் இவ்விஷயத்தை அறிந்துகொள்ளாதபடி குருட்டுத் தன்மையிலும், அறிவு இன்மையிலும் நம்மை வைத்து அரசு செய்து வருகிருர்கள். இதுவேயன்றி அவர்களுக்கு இயற்கையிலுள்ள சக்தியால் அரசு செய்யவில்லை. ஸிலி என்ற ஆங்கிலேய பண்டிதரும் இந்த அபிப்பிராயத்திலே கலக்கின்ருர். அவர்கள் இந்நாட்டிலே ஒரு பிடியளவு மனிதர்கள்தான் இருக்கிரு.ர்கள் என்பதை ஒவ்வொரு ஆங்கிலேயனும் அ றி கி ரு ன். எனவே அவர்களில் ஒவ்வொருவனுக்கும் நீங்கள் பலஹீனர்கள் என்றும் அவர்கள் பலவான்களென்றும் உங்களை நம்பச் செய்வது கடமையாகின்றது. இது ராஜதந்திரமுறை. நாம் இத்தனை காலம் இந்த தந்திரத்தால் ஏமாற்றப் பட்டிருந் தோம். இப்போது புதிய கட்சியார் உங்களைக் கேட்டுக் கொள்வது யாதெனில் உங்களுடைய வருங்காலப் பெருமை முற்றிலும் உங்களையே பொறுத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்பதே. உங்களுக்குச் சுதந்திரம் கொண்டிருக்க விருப்பமுண்டானல், நீங்கள் சுதந்திரம் பெற்று விடலாம். சுதந்திரம் பெற வேண்டு மென்ற விருப்பம் உங்களுக்கு இல்லையானல், நீங்கள் தோல்வியுற்று எந்நாளும் பதிதராய் விடுவீர்கள். உங்களில் அநேகர் ஆயுதச் சண்டையில் விருப்பமில்லாமல் இருக்கலாம். உங்களுக்கு நேரே சண்டை போடுவதில் விருப்பமில்லாவிட்டால், இந்த அன்னிய ராஜாங்கம் உங்களை அரசாள்வதற்கு நீங்கள் சகாயம் செய்யாதவாறு ஏற்படுதற்குரிய சிறிதளவு தன்மறுப்புக் காட்ட உங்களால் முடியாதா? இதுதான் பஹிஷ்காரம். பஹிஷ்காரம் ஒர் பெரிய ராஜதந்திர ஆயுதம் என்று நான் இந்தக் கருத்தின் மேல்தான் சொல்லுகிறேன். நாம் அவர்களின் சாமான்