பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் தொழிலாளரும் இப்பொழுது நம்முடைய நாட்டிலே தொழிற்சங்க இயக்கம் நன்கு வளர்ந்துவிட்டது. வேலை நிறுத்தங்கள் கதவடைப்புகள் எல்லாம் அடிக்கடி நடைபெறுகின்றன. தொழிலாளர், தம் உரிமைகளுக்காகவும், கோரிக்கை களுக்காகவும் இடைவிடாது போராடி வருகின்றனர். ஆனல், பாரதியார் காலத்திலே இந்தியத் தொழிற் சங்க இயக்கம் குழந்தைப் பருவத்தில் இருந்தது. தொழிற் சங்க இயக்கத்தின்பால் ஒருவர் அதுதாபம் காட்டுகிருர் என்ருல், அது சிறப்புடைய ஒன்று ஆகும்; மிக்க சிறப் புடையது. ஆயிரத்துத் தொளாயிரத்து ஆரும் ஆண்டு சூலை மாதத்திலே ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது; ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம். கிழக்கு இந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம். இப்போது, இந்த நாட்டிலுள்ள ரயில்பாதைகள் எல்லாம் நாட்டுடைமையாகி விட்டன. ஆனால் அந்தக் காலத்திலே அவ்விதம் இல்லை. இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் பாதைகள் இருந்தன. ரயில்வண்டிகள் ஓடின. இப்படிப் பல்வேறு பகுதிகளிலும் இருந்த ரயில் பாதைகள் பல்வேறு கம்பெனிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. தமிழ் நாட்டிலே இருந்த ரயில்பாதைகள் எல்லாம் தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்குச் சொந்தம். மேற் 9