பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விதமான இமிசைகளுக்கும் உட்பட்டே தீரவேண்டும். பாரதமாதாவுக்குத் தொண்டு புரிவது விளையாட்டான காரியமன்று. சரீர இமிசைக்கு அஞ்சுவோர் அப்பெரும் தொண்டிற்குத் தகுதியுடையவராக மாட்டார்கள். எவ் வித பெருந்துன்பம் நேரிடினும் மனமஞ்சாத வீரர்களே பாரதமாதாவின் சேவைக்கு உரியவராவார்கள்” (இந்தியா, பிப்ரவரி 23 - 1907) பாரதியார் இவ்வாறு எழுதியதுடன் நின்ருரா? இல்லை. 'பால பாரத சங்கத்தின் கூட்டம் ஒன்றைக் கூட்டினர். ஜஸ்வந்தராய், அட்வனே ஆகிய இருவருக்கும் வாழ்த்துக் கூறியும் வணக்கம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினர். "ஆட்டைக் கடித்து, மாட்டைக்கடித்து மனிதனையே கடிக்க வருவதுபோல் கவர்ன்மெண்டார் வர்த்தமானப் பத்திரிகைகளையே மூச்சைப்பிடித்து விடுவதற்கு ஒரு யுக்தி ஏற்பாடு செய்துவிட்டார்கள். சர்க்காருக்கு விரோதமான (அதாவது ஜனங்களை கவர்ன்மெண்டாருக்கு விரோத மாகத் துண்டுகிற) பத்திரிகைளை லோகல் கவர்ன் மெண்டார் உடனே சட்டமூலமாக அடக்கிவிட வேண்டு மென்றும், இதில் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்றும் வைசிராய் இவ்வாரம் பிரசுரம் செய்திருக்கும் தீர்மானத்திலே சிபார்சுசெய்திருக்கிருர்கள். சர்க்காரை அழிக்கும்படி ஜனங்களைத் துாண்டிவிடும் பத்திரிகைகளை மாத்திரமே கவர்ன்மெண்டார் தண்டிப் பதில் நமக்கு ஆட்சேபமில்லை. ஏனென்ருல் அவ்வளவு அசாத்தியமான விஷயத்தைப் பிரசுரம் செய்யும் முக்கியப் பத்திரிகைகள் எதையும் நாம் பார்த்தது கிடையாது. ஆனல் இந்தத் தீர்மானத்தை வைத்துக்கொண்டு சுதேச பக்தி பாராட்டும் பத்திரிகைகளை எல்லாம் லோகல்