பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I? பட்டவர். பாரதி இறந்தபோது உடன் இருந்தவர். அவருக்கு பாரதி எழுதிய கடிதம் ஒன்றையும் எனக்குக் காட்டினர் அவர். வக்கீல் எஸ். துரைசாமி அய்யர் அப்போது சென்னை யிலே புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கினர். இவர் பாரதியை நன்கு அறிந்தவர்; பாரதியுடன் பழகியவர்; பாரதியை ஆதரித்தவர். பாரதியுடன் சூரத் காங்கிரசுக்குச் சென்றவர். இவரையும் கண்டு பேசினேன். சர்க்கரைச் செட்டியார் தொழிற்சங்க இயக்கத்தில் பங்கு கொண்டவர்; சென்னை நகர மேயராக இருந்தவர்; பொதுவுடைமைக் கொள்கையிலே பற்றுடையவர். இவர் பாரதியை நன்கு அறிந்தவர்; பாரதியின் நண்பர்; பாரதி யுடன் சூரத் காங்கிரசுக்குச் சென்றவர். இவரையும் கண்டு பேசினேன். "சுதேசமித்திரன்' பத்திரிகை ஆசிரியர் சி. ஆர். சீனிவாசன் அவர்களையும் சந்தித்தேன்; பாரதியாரைப் பற்றி அறிந்து கொண்டேன். இவர்கள் எல்லாரும், பாரதி சென்னையிலே இருந்த போது அறிந்தவரே. பாரதியின் இளமை பற்றி அறிய வேண்டுமே! எப்படி அறிவது? இதுபற்றி நான் யோசித்து வந்தேன். எட்டயபுரத்திலிருந்தே வந்தார் ஒருவர். அவர் பெயர் குருகுகதாசபிள்ளை என்பது. புகழ் பெற்ற சோதிட வல்லுநர் அவர். சில மாதங்கள் சென்னையிலே தங்கி யிருந்தார் அவர். அவரைச் சந்தித்தேன். பாரதியின் இளமை வாழ்க்கைபற்றிப் பல விஷயங்கள் கூறினர் அவர்.