பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 அவரிடம் பாரதியை அழைத்துச் சென்ருர் குவளை கிருஷ்ணமாச்சாரி என்ற அந்த இளைஞர்; பாரதியை அவரிடம் விட்டுச் சென்று விட்டார். பாரதியார் கந்தரேச அய்யரிடம் தம்மை அறிவித்துக் கொண்டார். அறிந்த உடனே சுந்தரேச அய்யர் அவருக்கு ஏற்ற பாதுகாப்பான இடம் தந்து உதவினர். பாரதியும் அமைதியாக இருந்து வந்தார். சில நாட்கள் சென்றன. மண்டயம் பூரீநிவாச அய்யங்கார் வந்தார்; தமக்குத் தெரிந்த நண்பர் பலரை பாரதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்; பாரதிக்கு வேண்டிய வசதிகளும் செய்துவிட்டுப் போனர். பாரதியார் புதுவைக்குச் சென்ற சிலநாட்களுக்குப்பின் என்னஆயிற்று? எஸ். என். திருமலாச்சாரியார், மண்டயம் பூரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் புதுவை சேர்ந்தனர். புதுவையினின்றும் இந்தியா’ பத்திரிகையை வெளியிட எண்ணினர். இந்தியா’ பத்திரிகை அச்சகமும் புதுவைக் குக் கொண்டுபோகப் பட்டது. புதுவையைச் சேர்ந்த எஸ். லக்ஷ்மீநாராயண அய்யர் என்பவர் பத்திரிகையை வெளியிடுபவராகப் பதிவு செய்து கொண்டார். சரஸ்வதி அச்சகம் என்ற பெயரில் இந்தியா அச்சகம் தோன்றியது. புதுவை எத்ரான்ஷேர் தெருவில் 58ம் எண் உள்ள வீட்டில் இந்த அச்சகம் நிறுவப்பட்டது. அக்டோபர் (1908) 20 ந் தேதி முதல் இந்தியா பத்திரிகை புதுச்சேரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. புதுச்சேரி கலவை பங்களாவில் ஒரு சிறு குளம் இருந்தது. அந்தக் குளத்தருகே ஒரு சிறு கட்டிட மும் இருந்தது. தளம் போடப்பட்ட கட்டிடம் அது. 10