பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 அவ்வாபீஸிலுள்ளார் தனக்குப் போதையைத் தந்து கையொப்பம் வாங்கிக் கொண்டாரென்று சொன்ன தாகவும் சொன்னர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த நமது நண்பரில் ஒருவர், இப்படிப் பொய் சொல்லலாமா வெனக் கேட்டதற்கு, "எப்படியாவது நான் தப்பிக் கொள்ள வேண்டிய மார்க்கத்தில் சொன்னேனே யொழிய வேறில்லை" என்று சொல்லிவிட்டு, சற்று நேரம் சென்று நாளை வருவதாக உத்தரவு பெற்றுக் கொண்டு போய் விட்டார். பிறகு, இந்த சம்பாஷணை நடந்த போதிருந்த வேருெரு நண்பர் தன்னிடத்தில் இன்பார்மரான இந்த நண்பன் தனக்கு ஆங்கில அரசாட்சியில் இந்த 'இந்தியா" ஆபீஸ்காரரை எவ்விடத்திலாவது பிடித்துக் கொடுத்தால் ஒரு பெருத்த வெகுமானம் செய்வதாக வாக்குத் தத்தம் செய்திருக்கிருர்களென்றும், இவரை சேர்க்கக் கூடா தென்றும், சேர்த்தால் தீமையே விளையக் கூடுமென்றும் வற்புறுத்தினர். நாம் அதற்கு தர்ம தேவதையின் ஸ்காயமும் பாரத மாதாவின் அருளும் உள்ள வரையில் நமக்குத் தீங்கு வராதென்றும், நாம் யாருக்கும் கனவிலும் கூட தீங்கை எண்ணவில்லை என்றும் சொல்லி முடித்தோம். -பாரதி புதையல்-பாகம் - 11-ரா. அ. ப. பக்கம் 221-223 இப்படியாக "இந்தியா' பத்திரிகை நடந்து கொண் டிருந்தபோது அதை நிர்வகித்து வந்த எம். பி. திருமலாசி சாரியார் ஐரோப்பாவுக்குப் புறப்பட்டுச் சென்ருர். பத்திரிகை நடத்தும் பொறுப்பை மண்டயம் பூரீநிவாசா சாரியார் ஏற்றுக் கொண்டார். சில மாதங்கள் சென்றன . மண்டயம் பூரீநிவாசாச்சாரியார் சென்னைக்கு ጨዞU வேண்டியவர் ஆனர். எனவே பத்திரிகை நடத்தும் பொறுப்பை பி. டி. ரங்காச்சாரியார் என்பவரிடம் ஒப்பு வித்துச் சென்னை சேர்ந்தார்.