பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፬8 ஒரு பத்திரிகையும் வெளியிட்டு வந்தார். அந்தப் பத்திரிகை புதுச்சேரியில் உள்ளவர்களிடையே மட்டும் உலவி வந்தது. அந்தப் பத் தி ரி ைக யி ன் பெயர் 'சூர்யோதயம்' என்பது. "சூர்யோதயம்' உரிமையாளர் சைகோன் சின்னய்ய நாயுடு பாரதியைப் பற்றி அறிந்திருந்தார்; சிற்சில சமயங் களில் பாரதியைப் பார்த்தவரும் ஆவர். ஆனல் பாரதியோ அவரை நேரில் கண்டவர் அல்லர். பாரதியாருடன் இருந்த நா. க சா மி அவரை அறிவார். நாயுடுவும் நாகசாமியை நன்கு அறிந்தவரே. இவ்விருவரும் பலமுறை சந்தித்திருக்கிரு.ர்கள்; பேசியுமிருக்கிரு.ர்கள். எனவே, பாரதியாரை நாயுடுவிடம் அழைத்துச் சென்ருர் நாகசாமி. பாரதி, நாகசாமி ஆகியோர் இருவரையும் கண்ட நாயுடு அவ்விருவரையும் மரியாதையோடு வரவேற்ருt. நாயுடுவைத் தனியே அழைத்துச் சென்ருர் நாகசாமி. அன்று காலை 'இந்தியா ஆபீசில் நடந்தவற்றை யெல்லாம் விவரித்தார். பாரதியாரின் உள்ளம் பட்ட பாட்டையும் எடுத்துக் கூறினர். கேட்டார் நாயுடு; மிக வருந்தினர். பாரதியாரிடம் வந்தார். "உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின் சூர்யோதயம் பத்திரிகையை நீங்களே நடத்துங்கள். வேண்டிய ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்' என்ருர். சம்மதம் தெரிவித்தார் பாரதியார். எல்லாருக்கும் சிற்றுண்டி கொண்டுவரச் சொன்னர் நாயுடு. சிற்றுண்டியும் வந்தது. பாரதி உள்ளம் மகிழ்ந்தார். அவர் தம் முகம் மலர்ந்தது. பத்திரிகை நடத்துவது பற்றி மூவரும் மனம் விட்டுப் பேசினர்; ஒரு முடிவுக்கு வந்தனர். மறு நாள் முதல் வேலை தொடங்கலாம் என்று கூறினர். பாரதியும் நாகசாமியும் நாயுடுவிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.