பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 கண்டனச் சொற்கள் உள்ளத்தைத் தொடுகின்றன. உயர்ந்த மனிதாபிமானம் கொண்டு விளங்குகின்றன. (பாரதி புதையல் - ரா. அ. பத்மநாபன்) அந்நியப் பொருள்களை விலக்குதல் என்று திலகர் கட்சியார் கூறினரே! அந்த விலக்கில் ஒன்று அந்நிய ஆட்சியில் பதவி வகித்தல் என்பது. நம்மை ஆளும் அந்நியன் நம்மில் சிலரைப் பிடித்து உயர்ந்த பதவிகள் அளிப்பது எதன் பொருட்டு? சுதேசிக் கிளர்ச்சி செய்யும் தேசாபிமானிகளை நசுக்கும் பொருட்டு. இரும்பை வெட்ட மற்ருேர் இரும்பு உதவுவதுபோல் இந்தியரைக் கொண்டே இந்தியரை நசுக்குகிறது அந்நிய ஆட்சி. அதற்கு இந்தியர் ஒரு கருவியாகக் கூடாது. எனவே, அந்நிய ஆட்சியில் உத்தியோகம் வகிப்பது கூடாது என்பது திலகர் கட்சிக் கோட்பாடு. அதை எவ்வளவு அழகாக பாரதியார் இதில் விளக்கியுள்ளார் என்பது காண்க. மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் களின் பொருட்டுப் போராடினர் அல்லவா! அந்தப் போராட்டம் இந்திய அறத்தின் அடிப்படையில் நன்டை பெறுதல் கண்டார் பார தி. அப்போராட்டத்தை ஆதரித்தார். பன்முறை தம் 'இந்தியா’ பத்திரிகையில் எழுதினர். 1909ம் ஆண்டு பாரிஸ்டர் காந்தி லண்டன் சென்ருர்: தென் ஆப்பிரிக்க இந்தியர் சார்பிலே, அவர்தம் தூதுவராக சென்ருர். இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் அரசாங்க காலனி மந்திரியைச் சந்திக்கச் சென்ருர்: தென் ஆப்பிரிக்க இந்தியர் தம் துன்பங்களே எடுத்துச் சொல்வதற் தாகச் சென்ருர். பயன் ஏதும் விளையவில்லை. மீண்டும்