பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 'எட்டயபுரம் ஜமீந்தார் அழைத்து வரச் சொன்னர்" என்ருர். எட்டயபுரம் ஜ மீ ந் தாரி ன் சதியை அந்தப் பாட்டனரும் அறியார். தமது பேரனை ஆதரிக்கவே ஜமீந்தார் அழைக்கிருர் என்று எண்ணினர் அந்த அப்பாவி மனிதர். கேட்டார் பாரதி. அவரது முகம் சிவந்தது. சினம் பொங்கியது. மீசையை உருவினர். "பாஞ்சாலங் குறிச்சியை முன்பு காட்டிக் கொடுத்துப் பரிசு பெற்றது போல என்னையும் வெள்ளைக்காரனுக்குக் காட்டிக் கொடுத்துப் பரிசு பெற நினைக்கிருர் ஜமீந்தார். ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள்" என்று கர்ஜித் தாரி பாரதியார். பாரதியின் பாட்டனரும், பாட்டியாரும் ஒரு மாதம் இருந்தனர். பிறகே அவரை ஊருக்கு அனுப்பினர் பாரதியார். (சித்திர பாரதி-ரா. அ. பத்மநாபன்.) புதுச்சேரியில் பாரதிக்கு நண்பரான செட்டியார் மூவர். ஒருவர் வெல்லச்சு செட்டியார்; இன்னொருவரி விளக்கெண்ணெய் செட்டியார்; மற்ருெருவர் எலிக்குஞ்க செட்டியார். வெல்லச்சு செட்டியாரின் உண்மைப் பெயர் கிருஷ்ண சாமி செட்டி என்பது. இவர் ஒர் இளைஞர்; இருபது வயதினர்; நெசவுத் தொழில் செய்பவர். குள்ளமானவர்; கெட்டியான இரட்டை நாடி உடல் பெற்றவர்; சோர்வே அறியாதவர். பாரதியார் இவருக்கு வைத்த செல்லப் பெயர் வெல்லச்சு செட்டியார் என்பது.