பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I74 வெளிவந்த திலகர் என்ன கண்டார்? தீவிர இயக்கம் ஒய்ந்து போனது கண்டார். நாட்டிலே எழுச்சி வற்றி வரண்டு போனது கண்டார். இந்நிலையில் அன்னி பெசன்ட் அம்மையார் இந்திய அரசியல் வானிலே தோன்றி வளர்தல் கண்டார். அவரது ஹோம்ரூல் கொள்கை திலகரைக் கவர்ந்தது. 1916ஆம்ஆண்டிலே புளு நகரத்திலே ஹோம்ருல்லிக்" என்ற பெயர் கொண்ட சங்கம் ஒன்றைத் தொடங்கினர் திலகர். சில மாதங்கள் சென்றன. சென்னையிலும் ஹோம்ரூல்" இயக்கத்தைத் தொடங்கினர் அன்னிபெசன்ட். ஹோம்ருல் கிளர்ச்சி நாடுமுழுவதும் நடைபெற்றது. படித்த வகுப்பினர் பலரும் இக் கிளர்ச்சியால் கவரப் பெற்றனர். ஆங்கிலப்பத்திரிகைகள் இரண்டு. ஒன்று. 'காமன்வீல்" மற்ருென்று நியூ இந்தியா' இந்த இரண்டு பத்திரிகைகள் வாயிலாகப் பெருங் கிளர்ச்சி செய்தார் அன்னி பெசன்ட். அரசாங்கம் அவரைச் கம்மா விடுமா? விடாது அன்ருே? அவரைக் கைது செய்தது. உதக மண்டலத்திலே வீடு காவலில்" வைத்தது. இதன் பயனக அன்னி பெசண்டின் அரசியல் செல் வாக்கு ஓங்கியது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டுக்கு இவர் தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பெற்ருர். பிரிட்டிஷ் இந்திய அரசியல் நிலையக் கூர்ந்து கவனித்து வந்தார் பாரதி. இந்திய அரசியலிலே அன்னி பெசன்ட் செல்வாக்குப் பெறுவதை அவர் விரும்பினர் அல்லர்.