பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 "ஜமீந்தார் இருக்கிருரா," என்று கேட்டார். எவரும் பதில் கூறவில்லை. பலமுறை கேட்டார். பதிலே இல்லை. பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. வெறுப்பும் هستان பாரதிக்குப் பசி. சாப்பிட எண்ணி அங்கிருந்த சத்திரம் ஒன்றுக்குப் போனர். அங்கே ஒருவர். பாரதியை அறிந்தவர் அவர். ஒரு பாகவதரும் ஆவார். பாரதியைக் கண்ட உடனே பாரதிக்குப் பிடிக்காத சில சொற்களைக் கூறினர். பாரதியாருக்குக் கோபம் வந்து விட்டது. சாப்பிடாமல் புறப்பட்டார். நேராக ராஜபளையம் சென்ருர். ராஜபாளையம் ராஜூக்களின் ஊர். ஊருக்கு வெளியே ஒரு கொட்டகை. ஊருக்குப் புதியவர் எவராவது வந்தால் அந்தக் கொட்டகையில்தான் இருப்பர். அந்தக் கொட்டகையில் உட்கார்ந்து இருந்தார் பாரதியார். தர்மராஜா என்பவர் அந்தக் காலத்திலே பிரபலமாக விளங்கியவர். தர்மகுணம் படைத்தவர். அவர் அவ்வழியே சென்ருர். பாரதியார், கொட்டகையில் இருக்கக் கண்டார். "யார் அவர்? என்னவேண்டும்? கேட்டுவா!" என்று ஓர் ஆளை அனுப்பினர். அந்த ஆள் வந்தார்; பாரதியைக் கண்டார்; கேட்டார். கவிராஜ சிங்கம் சுப்பிரமணிய பாரதி நான். பசிக் கிறது. சாப்பாடு வேண்டும்" என்று கூறினர் பாரதியார்.