பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 களுடன் இவன் சேர்ந்து போவதில்லை. எங்கேனும் மதன நூல்கள் வாசித்து பலர் உட்கார்ந்து ரளித்துக் கொண்டிருப்பதைக் கண்டால் இவனும் அங்கே போய் உட்கார்ந்து விடுவான். பள்ளிக்கூடத்துப் பாடங்க ளெல்லாம் கிருஷ்ணுர்ப்பணந்தான். பூகோள சாஸ்திரம், கணக்கு, சுகவழி முதலிய எத்தனையோ பாடங்கள் கீழ் வகுப்புகளிலே இவனுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார்கள். ஒன்றிலும் இவன் கருத்தைச் செலுத்த வில்லை. இவனுக்கு எப்போதும் ஒரே சாஸ்திரம், ஒரே கணக்கு, ஒரே வழிதானுண்டு. 'சாற்றுவதும் காமகலை சாதிப்பதும் போற்றுவதும் காமனடிப் போது” கவுண்டனூர் புலவர் கூட்டத்திலே சங்கரன் ஒருவனகி விட்டான். சுருக்கம் அவ்வளவுதான். இவன் பாட்டுக் களில் சிலசில பிழைகள் இருந்தபோதிலும் இவனுடைய சிறு வயதைக் கருதி அப்பிழைகளை யாரும் கவனிப்பதில்லை. சுவை மிகுதியைக் கருதி இவனை மிதமிஞ்சி புகழ்வோர் பலராயினர். ஒரு பாட்டில் எத்தனைக்கெத்தனை அசுத்த மான வார்த்தைகள் சேர்கின்றனவோ அத்தனைக் கத்தனை சுவையதிகமென்பது கவுண்டனூர்ப் புலவர்களுடைய முடிவு. எனவே, பையன் நாவும் கையும் சிறிதேனும் கூசாமல், காமுகர்களுக்கு வேண்டிய பதங்களைத் தாராள மாகப் பொழிந்து பாடல்கள் .ெ ச ய் ய ல ள ஞ ண். சங்கரனுடைய பந்துக்களுக்கெல்லாம் இந்த விஷயத்தில் பரமானந்தம். இவனுக்கு மூன்று வயதிலே தாய் இறந்துபோய் விட்டாள். தகப்பனர் பெயர் கப்பிரமணிய அய்யர். அவர் ராமசாமிக் கவுண்டருடைய ஆப்தர்களிலே ஒருவர். இங்கிலீஷ் படித்துப் பழைய காலத்துப் பரீrை