பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வைத்துக் கொள்ள வேண்டாம். சென்னப் பட்டணத் தில் சி.வை. தாமோதரம் பிள்ளை என்று ஒரு மகா வித்துவான் இருந்தாரே, கேள்விபட்டதுண்டா? அவர் சூளாமணி என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கு எழுதிய முகவுரையை யாரைக்கொண்டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா? திருவனந்த புரம் பெரிய கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகி அன்னிய பாஷைகள் ஆயிரங்கற்று நகரில் புலவர் சிகரமாக விளங்கிய சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய நூல்களில் ஏதேனுமொன்றை எப்போதாவது தலையணையாக வைத்து படுத்திருந்ததுண்டா? அல்லது அவர் புத்தகங்கள் வைத்திருந்த அலமாரியை மோந்து பார்த்ததுண்டா?" (இந்த அற்புதமான வாக்கியத்தைக் கேட்டு சபை கலீரென்று நகைக்கிறது) ஆ...சாரியர் பேசுவதற்காகத் திருவாய் மலர்ந்தருளினர். ஆனல் மலர்ந்த திருவாய் மொழிவதற்குள்ளாகவே முத்திருளன் அவரை பேச வொட்டாதபடி பின்வருமாறு கர்ஜனை புரியலாளுன். 'சாமி, சாமிகளே; அய்யங்கார்வாளே, பிறர் பேகம் போது நடுவிலே குறுக்கே பாயக்கூடாதென்று உங்கள் ஸ்மஸ்கிருத சாஸ்திரங்களிலே சொன்னது கிடையாதோ? அல்லது ஒருவேளை சொல்லியிருந்தால் அதை நீங்கள் படித்தது கிடையாதோ? சாமிகளே, மேலே நான் சொல்லிய புலவர்களும், இன்னும் ஆயிரக்கணக்கான வித்வத் சிரோமணிகளும், பதியிைரக்கணக்கான பண்டிதர் களும், நாற்பதியிைரக்கணக்கான, லக்ஷக்கணக்கான கோடிக்கணக்கான, பத்திரிகாசிரியர்களும், வடமொழி யைக் காட்டிலும் தமிழே உயர்ந்த பாஷையென்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கி பசுமரத்தாணி போல நாட்டியிருக்கிருர்கள். நீவிரி அதனையுணராது முட்டி குரீ இப் (குருவி) போல இடர்படுகின்ன்றிர்