பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 "கவுண்டவுண்ட தென மாரன் கண பொழியமிகச் சோர்ந்து கண்ணிராற்றிற் கவுண்ட வுண்ட மார்பினளாய் மகளுன்னே கினைந்து மனங்கரையா கின்ருள். கவுண்ட வுண்ட சீதையினை மாலையிட்ட பெருமானே கவுண்டனூரிற். கவுண்டவுண்டராமசாமித் துரையே விரைவிற் கலவி செய்யே.” இந்த யமக விருத்தம் பாடி முடிந்தவுடனே முத்திருளக் கவுண்டன் சபையோரைச் சுற்றித் திரும்பிக் காட்டிலே தனிச் சிங்கம் விழிப்பதுபோல ஆடம்பரமாக விழித்தான். புலவர்களுக்கெல்லாம் அடிவயிறு குழப்பமாயிற்று. யாரும் வாயைத் திறக்கவில்லை. கடைசியாக உபய வேதாந்த ஆம்ரோதனச்சாரியார் திருவாய் மலர்ந்து, "முத்திருளக் கவுண்டா இந்தப் பாட்டுக்கு நீதான் அர்த்தம் சொல்ல வேண்டும்' என்ருர். முத்திருள கவுன்டன் பின்னும் ஒரு முறை ஒரு சுற்று கற்றி விழித்து விட்டுச் சங்கரனிட மிருந்து காகிதத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு முறை கனைத்ததன் பின்பு, பின் வருமாறு வியாக்கியானம் செய்யலாளுன். இது நற்ருயிரங்கல் என்னும் துறை (அதாவது, தன் மகள், காதல், துன்பத்தால் வருந்துவதைக் கண்ட தாயொருத்தி மனம் பொறுக்காமல் சொல்லுவது.) கவுண்டவுண்ட தென மாரன் கணைபொழிய மிகச் சோர்ந்து கண்ணிராற்றிற்: கவுண்டவுன்ட மார்பினளாய் மகளுன்னை நினைந்து மனங்கரையா நின்ருள்: கவுண்ட வுண்ட சீதையினை மாலையிட்ட பெருமானே கவுண்ட னுரரிற், கவுண்டவுண்ட ராமசாமித் துரையே நீ விரைவிற் கலவி செய்யே."