பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ8 தம்பு செட்டித் தெருவில் இருந்த ஒரு வீட்டில் குடி, யிருந்தார் பாரதியார். வக்கீல் துரைசாமி ஐயர் மண்ணடி யிலுள்ள ராமசாமி தெருவில் இருந்தார். இருவரும் நண்பர் ஆயினர். சர்க்கரைச் செட்டியாரும் பாரதியின் நண்பர் ஆனர். இவர்கள் எல்லாரும் மாலை நேரத்திலே கணேஷ் கம்பெனியில் கூடுவார்கள். கணேஷ் கம்பெனியார் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற காப்பிக் கொம்டை வியாபாரி களாக விளங்கினர்கள். இந்தக் கம்பெனி முதல்வர் ராமசேஷய்யர் இவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார். கணேஷ் கம்பெனியில் ஒன்று கூடும் நண்பர்கள் வெகு உற்சாகமாகப் பேசிக்கொண்டே கடற்கரை செல்வார்கள். மணலில் அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். பற்பல விஷயங்கள் பற்றி விவாதிப்பார்கள். திட்டங்கள் தீட்டு வார்கள். பாரதியார் பாடுவார். என்ன பாட்டு? கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரம் பாடல்கள். அந்தப் பாடல்களிலே பெரிதும் ஈடுபட்டிருந் தார் பாரதியார். பாடல்களை எல்லாரும் கேட்டு இன்புறுவர். பின்பு எழுந்து அவரவர் இருப்பிடம் சேர்வர். இவ்வாறு நாள்தோறும் நடக்கும்.

  • சமூக சீர்திருத்தம் என்பது அந்த நாளிலே பெரிதும் பேசப்பட்ட ஒன்று. சமூக சீர்திருத்த சங்கம் ஒன்றும் சென்னையில் இருந்தது. அதன் பெயர் சோஷல் ரிபார்ம் அசோசியேஷன்' என்பதாகும்.

இச்சங்கத்தினர் எல்லாரும் கூடுவர்; சமூக சீர்திருத்தம் பற்றி வானளாவப் பேசுவர். என்ன சீர்திருத்தம்? சமபந்தி போஜனம் செய்யலாமா? கூடாதா? இதுதான் சீர் திருத்தம். எல்லா ஜாதியினரும் ஒன்று கூடி உண்பதில்

  • கூறியவர்-சர்க்கரைச் செட்டியார்.