பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இந்த ஆண்டிலேதான் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது இந்திய வைசிராயாக இருந்தவர் கர்ஸான் என்பவர். 1905ம் ஆண்டு அக்டோப? மாதத்திலே வங்கப் பிரிவினை அமுலுக்கு வந்தது. இந்தப் பிரிவினையை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றது. கண்டனக் கூட்டங்கள் ஒன்ரு? இரண்டா? ஆயிரம் என்ருல் அது மிகக் குறைவு. 1905ம் ஆண்டு டிசம்பர் மாதம் காசியிலே கூடியது காங் கி ர ஸ்: வங்கப் பிரிவினையைக் கண்டித்தது. அதிகாரவர்க்கம் அசைந்து கொடுக்கவில்லை. வங்கப் பிரிவு முற்றுப்பெற்ற விஷயம் என்றது. ஆனல் கிளர்ச்சி ஒயவில்லை; தொடர்ந்தது. கிளர்ச்சி வங்காள மாகாணத்துடன் நிற்கவில்லை. இந்திய நாடு முழுவதும் நடந்தது. வங்காளத்திலே இக் கிளர்ச்சியை முன்னின்று நடத்தியவர் சுரேந்திரநாத் பானர்ஜி, விபினசந்திரபாலர் முதலியோர். பாஞ்சாலத்திலே பா ஞ் சா ல சிங்கம் லாலா லஜபதிராயும், மகாராஷ்டிரத்திலே பாலகங்காதர திலகரும் வங்கப் பிரிவினையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். காங்கிரசுக்குள்ளே இரண்டு விதமான கருத்துத் தோன்றலாயிற்று. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நல்ல பிள்ளைகளாகவே நடந்து கொண்டு, அதனிடம் மன்ருடிக் கேட்டுக் கேட்டு நன்மை பெறவேண்டும் என்பது ஒரு விதக் கருத்து. இக்கருத்துக் கொண்டவர் கோபால கிருஷ்ண கோகலே, பிரோஸ்ஷா மேத்தா போன்ருேt. பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மண்டியிட்டுப் பிச்சை கேட்க வேண்டுவது இல்லை. நமது பலத்திலேயே நாம்