பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 யி டு பவராக வும் பதிவு செய்து கொண்டவர் எம். பூரீநிவாசன் என்பவர். தமிழ் நாட்டில் முதன் முதலாக அரசியல் கார்ட்டுன் வெளியிட்ட பத்திரிகை இந்தியாவே. பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்த அரசியல் கார்ட்டுன் வெளி வந்தது.

  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று சொற்களும் இந்தியா பத்திரிகையின் உயிர் நாடியாக தலைப்பிலே அச்சிடப்பட்டிருந்தன. இந்த மூன்று சொற்களும் பிரஞ்சுப் புரட்சியின் உயிர் நாடியான கோஷங்கள். இவற்றையே இந்தியா’ பத்திரிகையின் உயிர்நாடி கோஷமாகக் கொண்டார் பாரதியார்.

காங்கிரசுக்குள்ளே உருவாகி வளர்ந்து வந்த புதிய கட்சியின் கருத்துக்களை எல்லாம் மிகத்தெளிவாக விளக்கி வந்தது இந்தியா’ பத் தி ரி ைக. அம்மட்டோ! பாலகங்காதர திலகர், விபின சந்திரபாலர் ஆகியவர் களுக்குச் சமமாகத் தமிழ் நாட்டிலே விளங்கினர் பாரதியார். "ஒருநாளும் காங்கிரசாரின் கெஞ்சுதல்களுக்குச் செவி கொடுக்கப் போகாதவர்களாகிய கவர்ன்மெண்டாரை மீண்டும் மீண்டும் கெஞ்சுவதைத் தொழிலாக வைத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ஜனங்களின் அபிவிருத்தி பயிற்சி என்பவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். "கவர்ன்மெண்டாரின் சகாயமில்லாமல் ஜனங்கள் தாமாகவே செய்து கொள்ளக் கூடிய விஷயங்களில் முக்கியமாக சிரத்தை செலுத்த வேண்டும்.

  • மண்டயம் ரீநிவாசாச்சாரியார் - பாரதி புதையல்