பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 வருமாறு அழைத்தார். சென்னை திரும்பியவுடனே பாலரை வரவேற்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாரதியார்: 1907ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ந்தேதி இந்தியா' விலே பின்வருமாறு எழுதினர்: "இந்தியா இப்போதிருக்கும் இழிந்த நிலையிலிருந்து கைதுக்கி விடும் பொருட்டாக சுதேசியம் என்ற தெய்வம் வந்திருக்கிறது. இத்தெய்வம் நமது நாட்டிலே ஒவ்வொரு பாகங்களிலும் ஒவ்வொரு ரூபமாக அவதரிக்கின்றது. சிற்சில இடங்களிலே அவதாரங்கள் எல்லாக் கலைகளும் பொருந்தின வாகவும், சிற்சில இடங்களிலே கலைகள் குறைந்தனவாகவும் ஏற்பட்டிருக்கின்றன. பரிபூரண கலாவதாரம் என்று பூரீ திலக மகரிஷியைக் கூறலாம். அவருடைய பிராண சிநேகிதரும், கீழ் பெங்கால் முழுவதும் முடிசூடா அரசரு மாக விளங்கும் பூரீ விபினசந்திர்ர்,சுதேசிய தெய்வத்தின் வழிகாட்டவதாரமாகக் கருதுவதற்குரியவர், ஹநுமான் எப்படி ஆகாரம் முதலிய எவ்விதமான லோக போகங் களையும்.இச்சிக்காமல், ராம ராம என்று தியானம் செய்து கொண்டே ஆனந்தமடைந்திருந்ததாகச் .ெ சா ல் ல ப் படுகிறதோ, அதுபோல பூரீ விபின சந்திரரும் சதாகாலமும் பாரத நாட்டின் அபிவிருத்தியைப் பற்றியே தியானம் செய்வதிலேயே நாள் கழிக்கின்ருர், ஹநுமானுக்கு எப்படி ராமாமிருதம் ஜீவனமாக இருந்ததோ அதுபோல விபின சந்திரருக்கும் 'பாரதாமிருதம் ஜீவனம்' என்று கூறுதல் மிகவும் பொருந்தும். இவர் இன்னும் சில வாரங் களுக்குள்ளே சென்னை மாகாணத்துக்கு யாத்திரையின் பொருட்டாகவும் ஜன எழுப்புதலின் பொருட்டாகவும் வருகின்ருர் என்ற நற்செய்தியை மகா சந்தோஷத்துடன் தெரிவிக்கின்ருேம். .ெ த ய் வத் தி ற் கு சி செய்யும் உபசரணையைக் காட்டிலும், தொண்டர்களுக்குச் செய்யும் உபசரணைகள் மிகவும் பலிதமுடையன என்பது ஆரிய