பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அது முதல் அவர் என் வீட்டுக்கு வருவதும், என்ளுேடு உண்பதும், உறங்குவதும், நான் அவர் வீட்டுக்குப் போவதும் அவரோடு உண்பதும் உறங்குவதும் ஆக இருந் தோம். பிரான்ஸ் இத்தாலி இவைபோன்ற பிற தேசங்களின் சரிதத்தை மாமா ஆதியோடந்தமாக ஆவேசத்துடன் கூறி முடிப்பார். நான் அமைதியாகக் கேட்பது வழக்கம். ஒரு நாள் இத்தாலி நாட்டு தேசாபிமானி மாஜினியின் தேச ஊழிய யெளவன இத்தாலி சங்கத்தின் அங்கத்தின ராகச் சேர்ந்தோர் செய்துவந்த விசுவாசப் பிரமானச் செய்யுளை ஆங்கில பாஷையில் எனக்குப் படித்துக் காண் பித்தார் மாமா. அதனைக் கேட்டதும் நான் சொக்கிப் போனேன். அச் செய்யுளைத் தமிழில் பாடித் தருமாறு மாமாவை வேண்டினேன். அவர் அன்றே அந்த இடத்தி லேயே அதைக் கவிதையாக மொழி பெயர்த்துத் தந்தார். அதுதான் பேரருட் கடவுள் திருவடியாணை எனத் தொடங்கும் பாட்டு, பாரதியும், வ. உ. சியும் நெருங்கிய நண்பரானது எப்படி என்பதையும், வ. உ. சி தீவிர தேசாபிமானியானது எவரால் என்பதையும் கண்டோம் . இனி தூத்துக்குடிக்குப் போவோம். அந்தக் காலத்திலே தூத்துக்குடியிலிருந்து மக்களை ஏற்றிச் சென்ற கப்பல் வியாபாரம் முழுவதும் வெள்ளையர் வசமே இருந்தது; சரக்குகளே ஏற்றிச் செல்வதும் அவர்கள் வசமே இருந்தது. இலங்கை நமது அண்டை நாடு. அந்த நாட்டிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் பெரும் அளவில் வியாபாரம் செய்து வந்தது இந்தியா. இந்தப் பொருள்களை எல்லாம் வெள்ளைக்கார கப்பல் கம்பெனி