பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மலும் மன்ருடி வருகின்றனர். நம்மவர்களின் நடை மிகுந்த திருப்தியடையத் தக்கதாய் இருக்கின்றது. "ஷாலைன் ஸ்டீமர்களின் முதலாளியான எஸ்ஸாஜிடாஜ் பாய் என்ற பம்பாய் வர்த்தகர் சி.வ. (சுதேசிய) கம்பெனி யாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மேற்படி சுதேசியக் கம்பெனியாருக்கு சில கப்பல்கள் கொடுத்திருக்கிருர்கள் என்பதை நேயர்கள் அறிவார்கள். அந்தக் கப்பல்கள் லாபம் பெறுவதைத் தடுக்க வேண்டுமென்ற விஷயத்தில் பி. ஐ. எஸ். என் (வெள்ளை) கம்பெனியாரும் மிஸ்டர் வாலர் என்ற துாத்துக்குடி மாஜிஸ்டிரேட்டும் வேறுபல ஜனத் துரோகிகளும் எத்தனை முறை பாடுபட்டார்கள் என்பதையும் பலமுறை பேசியிருக்கிருேம். இப்போது மேற்படி எஸ்ஸாஜி டாஜ்பாய் என்ற பம்பாய் வர்த்தகரே. நம்மவர்களுக்கு விரோதமாகத் திரும்பிவிட்டாரென்று கேள்விப்பட்டு மிகுந்த ஆச்சர்யமடைகிருேம். இந்த பம்பாய் வர்த்தகருக்கு மேற்படி ஒப்பந்தத்திலிருந்து விசேஷமான லாபம் கிடைத்திருக்கிறது. மேலும் இவர் ஒப்பந்தப்படி செப்டம்பர் மாதம் 30ந்தேதி வரை கப்பல் விட்டு வைக்கக் கடமைப்பட்டிருக்கிரு.ர்.

பி. ஐ. எஸ். என். கம்பெனியார் பக்கம் சேர்ந்து கொண்டு அவர்களுடைய தூண்டுதலின் பெயரில் மேற்படி எஸ்ஸாஜி டாஜ்பாய் இங்ங்ணம் செய்திருக்கலாமென்று தோன்றுகிறது. இந்த சந்தேகத்தின் பேரில் ஹிந்து வர்த்தகர்களுக்கு பி. ஐ. எஸ். என். கம்பெனியார் மீது மிகுந்த கோபம் உண்டாயிருக்கிறது. அவர்கள் மேற்படி பி. ஐ. எஸ். என் கம்பெனிக் கப்பல்களில் இனிச் சரக்கு ஏற்றவே கூடாது என்று நிச்சயம் செய்து விட்டார்கள்.

"இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தூத்துக்குடி தேச பக்தர் களின் கண்களைத் திறந்து விட்டன. "இனி எக்காரணம்