பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சக்ரவர்த்தி முதலிய மகான்களெல்லாம் வந்து இறங்கி யிருந்தார்கள். ஸ அரத் நகரத்துப் பு தி ய கட்சி நண்பர்கள் எங்களுக்குச் செய்து வைத்த வசதி மிகவும் அசெளகரியமானது. கீழே ஒரு கோயில், மேலே பெங்காளத்திலிருந்தும், சென்னை மாகாணத்திலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகளுக்கு இடம். புழுதி சொல்ல முடியாது. நடந்து போகும் போதே, மோட்டார் வண்டி யோடினற் போலப் புழுதி, எழுந்தால் புழுதி. தூசியும் குப்பையும் நிறைந்த அந்த இடத்திலே செல்வத்திலும், கல்வியிலும் நிகரற்றவர்களும், பாரத நாடு முழுமையும் பரவிய கீர்த்தியுடையவர்களுமான பெரியோர்கள் வந்து தங்கி இருந்தார்கள். ஜலத்திற்கும் கஷ்டம்தான். சாப்பாட்டுக்கு வீட்டிலிருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் ஒரு அன்னசாலை வைத்திருந்தார்கள். அந்த அன்ன. சாலையின் சாப்பாடு மகாராஷ்ட்ர சபையார்களால் தயார் செய்து வைக்கப்பட்ட தாகையால் மற்றவர்களுக்குக் கொஞ்ச மேனும் ஒத்துக் கொள்ளவில்லை. வட தேசத்திலே திருஷ்டி தோஷம் கிடையாது. தென்னுட்டிலேயிருந்த பிராமணர் கள் மற்ற வகுப்பினர் எல்லோரும் சேர்ந்து பாரத நாடு முழுமையினுமிருந்து வந்திருந்த சுதேசிகளுடன் ஒரே பந்தியில் உட்கார்ந்து உண்டனர். நமது மாகாணத்திலிருந்து போன பிரதிநிதிகளிலே பெரும்பான்மைய்ோர் மேற்படி அன்னசாலையில் உண்டு, அதற்கடுத்த புதியகட்சி வசதியிலேயே தங்கி விட்டார்கள். சிலர் மட்டும் பொதுக் காங்கிரஸ் பந்தலிலே போய் வாசம் புரிந்தோம். 24, 25ந் தேதிகளில் எங்களுடைய சுதேசிய சங்கம் (நாஷனலிஸ்ட் கான்பரன்ஸ்) நடைபெற்றது. இரண்டு தினங்களிலும் பூரீ அரவிந்த கோஷ் (வந்தே மாதரம் பத்திராதிபர்) அக்கிராசனம் வகித்தார். பூரீமான் திலகர் உபந்நியாசம் செய்தார். காங்கிரஸ் சபை