பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கொள்வார்களானல் அ ச் ச ம ய த் தி ல் அவர்களுக் குண்டாகும் கோபமும், ஆத்திரமும் ஆன சண்ட மாருதத்தை அடக்க யாராலும் முடியாது. ஆயிரம் தொண்டைகளிலிருந்து ஏக காலத்தில் நானவிதமான இரைச்சல்கள் உண்டாயின. சபை நிலைகலங்கிப் போய் விட்டது. சுரேந்திர பானர்ஜியிடம் விசுவாசம் மாரு திருந்த கட்சியார் ஒரு புறத்திலே எதிர்ச் சத்தம் கிளப்பத் தொடங்கிவிட்டார்கள். பேசும் பேசும் Go on Go on" என்ற கூக்குரல்கள் வேறு அபரிமிதமாக எழுந்துவிட்டன. இரண்டு வகைப்பட்ட இந்தச் சத்தத்திலே சுரேந்திரநாத் பானர்ஜியின் கடல் ஒலி போன்ற'ஒசை கூட அடங்கிப் போய்விட்டது. அவர் எவ்வளவோ சிரமப்பட்டுத் தம்மால் இயன்ற மட்டும் உரத்த குரலிலே பேசிப் பார்த்தார். பலிதமில்லாமற் போய் விட்டது. உடனே சுரேந்திர நாதர் திடீரென்று மேஜையின்மீது தாவி ஏறி நின்று கொண்டு I will be heard" எனக்கு நீங்கள் செவி கொடுத்தே தீர வேண்டும்' என்று கர்ஜனை செய்தார். எவ்வளவு கர்ஜனைசெய்தால்தான் என்ன? நிஷ்பிரயோஜன மாகி விட்டது. சுரேந்திரநாத் பானர்ஜி மேஜையிலிருந்து இறங்கி விட்டார். சபை இனி நாளைக்குத்தான் கூடும் என்று சொல்லி விட்டு நிதானக் கட்சித்தலைவர் எல்லாம் பின் பக்கத்து வாயில் வழியாகத் தப்பிச் சென்று விட்டார்கள். வருணிக்க முடியாத குழப்பமும் அமளியும் ஒருமட்டில் முடிவு பெற்றன. இவ்வளவு விமரிசையோடு 26ந் தேதி காங்கிரஸ் சபை கலைந்தது. அப்பால் இரவு வரையிலும் எங்கே பார்த்தாலும் இதுவே பேச்சாயிருந்தது. காங்கிரஸ் சபை தொடங்கி 23 வருஷ காலமாயும் இதுவரை இந்தமாதிரி ஒரு போதும்