பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பகலிலே காங்கிரஸ் மகாசபை கூடிற்று. சுரேந்திரர் தாம் முதல் நாள் செய்யத் தொடங்கிய உபந்யாசத்தைச் செய்து முடித்தார். அப்பால் திலகர் அமெண்ட் மெண்ட்” திருத்தப் பிரேரணை கொண்டுவந்தார். இதுவரை சபை முழுவதும் அமைதி நிரம்பியிருந்தது. A calm before storm (புயற்காற்றின் முன்னேயுள்ள நிச்சப்தம்) என்று ஆங்கிலேயர் கூறும் வசனத்தைப்போல சாதாரணமாக உள்ள இரைச்சல்கூட இல்லாது அடங்கிப் போயிருந்தது. திலகர் பிரசங்க மேடைமீது ஏறும்போது ஒரு வாலண்டியர் எதிர்த்தான். அந்த வாலண்டியரை யாரோ தள்ளி விட்டார்கள். திலகர் அமெண்ட் மெண்ட் கொண்டு வரப் போவதாக முன்னமே சீட்டு மூலமாகத் தெரிவித்துக் கூட அவரைப் பேச வொட்டாமல் தடுத்துவிட வேண்டும் என்ற அக்கிரமமும், அசம்பாவிதமான முயற்சியும் நிதானக் கட்சித் தலைவர்களால் செய்யப்பட்டது. முதல் நாள் சுரேந்திரர் பேசும்போது சில புதிய கட்சி வாலிபர்கள் இரைச்சலிட்டார்கள் என்பது பற்றிப் பெரிய நியாயங்கள் பேசியதுபோக, இப்போது வயோதிகர்களும், அநுபவசாலி களும் கீர்த்திமான்களுமாகிய நிதானத் தலைவர்கள் அதனிலும் எத்தனையோ மடங்கு கேடுகெட்ட காரியத் திலே தலைப்பட்டுவிட்டார்கள். திலகர் பேசக் கூடா தென்று யாதொரு நியாயமுமில்லாமல் வற்புறுத்தினர்கள். இதற்குள்ளே வெகு அவசரமாக ராஸ் விகாரி கோஷ் நாற்காலிமீது தாவிக்குதித்துத் தாமே காங்கிரஸ் சபா நாயகர் எ ன் பதாக உட்கார்ந்துவிட்டார். திலகர் ராஸ் விகாரியை நோக்கித் 'தாம் இன்னும் ஒழுங்குப்படி பிரஸிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்படவில்லை, அதற்குள் ஏன் அவசரம்?' என்று கேட்டார். ராஸ் விகாரி "தாம் பேசக் கூடாது என்று சொல்லித் தமது உபந்நியாசத்தைப் படனம் செய்ய ஆரம்பித்துவிட்டார். தொடங்கியது