பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திருக்கின்றன.

நமது நாட்டுப் பொறியியல், வைத்தியம் மருந்தியல், கட்டிடக் கலை, சிற்பக் கலை, தத்துவம் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் எல்லாம் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அழிக்கப்பட்டு விட்டன. பலவற்றில் ஐரோப்பிய முறைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. மேல் நாட்டுக் கல்வி முறையில் நல்லவற்றை பயனுள்ள வற்ற்ை எடுத்துக் கொண்டு, அல்லனவற்றை நீக்கி புதிய கல்வி முறையை உருவாக்க வேண்டும்.

நமது கல்வி முறையில் நமது வேதங்கள் உபநிடதங்கள், புராணங்கள், தர்ம நூல்கள். தத்துவ ஞானம், அர்த்த சாஸ்திரங்கள், கட்டிடக் கலை, சிற்பக் கலை, சாகுபடி முறை, வைத்தியம், மருத்தியல், எந்திரவியல், வேதியியல், இயற்பியல், வானவியல் முதலியவை பலவற்றையும் புதுப்பித்து நவீனப்படுத்தவேண்டும்.

நமது நாட்டிற்குத் தேவையான அவசியமான தேசியக்கல்வி முறையையும் பயிற்சி முறையையும் புதுப்பித்து நமது தேசியக் கல்வியை உருவாக்கி வளர்க்க வேண்டும். -

தேசியக் கல்வி பற்றி தனி நூல் எழுதலாம். தேசியக் கல்விபற்றி நாம் விரிவாக சிந்திக்க வேண்டும். நமது கல்வி பாடத்திட்டம், கல்வி நிறுவனங்கள், போதானா முறை, ஆராய்ச்சி, பயன்படுத்தல், முதலியவற்றை இந்திய மயமாக்க வேண்டும். உலக சிந்தனையோடு இணைக்க வேண்டும்.

பாரதி சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களில் ஒன்றாக தேசியக் கல்வியைக் குறிப்பிடுகிறார்.

அடிப்படைத் தொழிலும் உற்பத்தி முறையும்

எந்த ஒரு நாட்டிற்கும் அடிப்படை உற்பத்தி என்பது அந்த நாட்டில் முதல் நிலை உற்பத்திப் பொருக்கத்திற்கான வாய்ப்புகளாகும். அதாவது நிலம், நீர் ஆதாரம், இயற்கை வளம், மலை, காடு, சுரங்கம், மனித ஆற்றல் முதலியவைகளாகும். அவையே அந்த நாட்டின் ஆதார செல்வங்களாகும்.

கம்பனுடைய முக்கியமான ஒரு கருத்தை இங்கு மீண்டும் நினைவு கூறுவோம்.

‘கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா

நிலம் சுரக்கும் நிறைவளம் நல் மணி

பிலம் சுரக்கும் பெறுவதற்கு அரிய தம்

குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்”

118