பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டன் தனது முழு பலத்துடன் இந்திய நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. பிரிட்டனின் வர்த்தகக் கொள்கையினால் இந்தியாவின் தொழில் வர்த்தகம் நலிவுற்றிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் இந்திய தேசிய இயக்கம், இந்தியத் தொழில்களை ப் பாதுகாக்கும் நோக்கத்தில் அந்நிய வஸ்து வர்ஜனம் என்னும் சுதேசி லட்சியத்தை முன் வைத்தது. அதனால் நல்ல பலன்களும் கிடைத்தது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் பெரும் போர்கள் நடந்ததும், அதில் பிரிட்டன் ஈடுபட்டு வெற்றி பெற்றாலும் ஆட்சேதம் பொருட் சேதம் காரணமாக பலவீன மடைந்திருந்தது. அந்தக் காலங்களில் இந்தியத் தொழில்கள் முன்னுக்கு வந்து ஓரளவிற்கு பலம் பெற்றது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்1952ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் திட்டமிடப்பட்டு நமது பெரிய தொழில்களும் வளர்ச்சி பெற்றன. பல தடைகளையும் மீறி பலமடைந்தும் வருகின்றன. ஆயினும் உலக அளவில் பாரதம் வளர்முக நாடுகளின் வரிசையில்தான் இருக்கிறது.

இருப்பினும், இந்தியாவில் ஒரு வலுவான விவசாய தளம் மக்கள் தொகை மிக்க பெரிய சந்தை, மனித வளம் ஆகியவை இருப்பதால் எண்பதாம் ஆண்டுகளிலிருந்து தொழில்துறையிலும் பொதுவான பொருள் உற்பத்தித் துறையிலும் சற்று அதிகமான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் தனி உற்பத்தியிலும் வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காண்த் தொடங்கியிருக்கிறது. உலக நாடுகளில் கிழக்கு நாடான ஜப்பானுடன் அதிகமான தொழில் தொடர்பு ஏறுபட்டு வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் அதிகமான தொடர்பு ஏற்பட்டு வருகிறது. எனவே உலக நாடுகளின் அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்குப் மரியாதையும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் அமெரிக்க பிரிட்டிஷ் ஆதிக்க முயற்சிகளின் காரணமாக இந்தியாவின் முன்னேற்றம் செல்வாக்கு பல வகைகளிலும் தடைப்படத்தான் செய்கிறது.

ஆயினும் இந்திய நாட்டின் அரசியல் செல்வாக்கும் பொது செல்வாக்கும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையில் அதிகரித்து வரத்தான் செய்கிறது.

நம்மிடம் ஆதிக்க உணர்வோ,பெரியண்மை மனோபாவமோ கிடையாது.

இந்த சூழ்நிலையில் நமது சுதேசியத்தைப் பலப்படுத்த வேண்டும். நமது விவசாய தளத்தை பலப்படுத்த வேண்டும். நமது விவசாய உற்பத்தியை உற்பத்தித் திறனையும் பலப்படுத்த வேண்டும். நமது பொருளாதாரத்தின் அடிப்படை பலம் நமது விவசாய உற்பத்தியும் சிறு தொழில்களுமாகும். இன்று இந்திய நாட்டில் ஒர கோடிக்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் உள்ளன. அவை மேலும் எண்ணிக்கையிலும் உற்பத்தி அளவிலும் உயர்ந்து கொண்டு வருகிறது. இதை படிப்படியாக மேலும் அதிகமாக சுதேசி == மயமாக்க வேண்டும். தொழில் நுட்பத்திலும் புதிய உத்திகளுடன்

126