பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவில் கொள்வோமாக.

5. பாரதி தனது தேசிய இயக்கப் பாடல்களில்,

சத்திரபதி சிவாஜி தனது சைன்யத்திற்குக் கூறியதாகப் பாடிய பாடலும் குருகோவிந்தர் பற்றிய பாடலும் அற்புதமானவை. அவை நாம என்னென்றும் நினைவுறுத்திப்பாட வேண்டியவையாகும்.

சத்ரபதி சிவாஜி பற்றிய பாடலில் பாரத பூமி பழம் பெரும்பூமி

நீரதன் புதல்வர்

இந்நினைவ கற்றாதீர் என்றும்

பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்

நீரதன் புதல்வர், இந்நினைவதற்றாதீர் என்று குறிப்பிடுகிறார்.

6. வெள்ளைக்கார விஞ்சு துரை தேச பக்தரை மிரட்டுவதாகவும், தேச பக்தர் விஞ்சு.துரைக்குச் சரியான பதில் கூறுவதாகவும் உள்ள பாடல் உள்ளத்தை உலுக்குவதாகும்.

நாட்டிலெங்கும் ஸ்வதந்திர வாஞ்சையை

நாட்டினால்-கனல் மூட்டினாய்

‘வர்ட்டியுன்னை மடக்கி சிறைக்குள்ளே

மாட்டுவேன் வலி காட்டுவேன்’

என்று வெள்ளைக்கார ஆட்சியாளர் கூறுவதாகத் தொடங்கு பாடல் வரிகள் அற்புதமானது.

அதற்குப் பதில் அளித்த தேச பக்தன் கூறுகிறான்,

“சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே

துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்

எந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ என்றும் ‘வந்தே மாதம் என்றுயிர்போம் வரை வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்

எந்த மாருயிர் அன்னைய்ைப் போற்றுதல்

12