பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தனர் போலும்’

குழந்தைகள் வீட்டையே அரசனாகக் கருதுகிறார்கள் ஸ்திரிகளும் அப்படியே செய்கிறார்கள். குடும்ப வாழ்க்கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதனால் அன்றோ திருவள்ளுவரும்,

‘இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்றதுணை’ என்றார்.

‘'தேசக் கல்விக்கு குடும்பக்

கல்வியே வேர்” என்று ஏற்கனவே குறிப்பிட்டோம்.

பாரத தேசத்தில் குடும்ப அமைப்பு புனிதமானது. இங்கு தான் ஏகபத்தினி விரதம் ன்ெபதும் கற்பு நிலை என்பதும் நமது கலாச்சாரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகளில் விடுதலைக் காதல் கொள்கையைக் கடைப் பிடித்துக் கொள்கிறார்கள். நமது நாட்டுக் கலாச்சாரத்தில் விடுதலைக் காதல் கொள்கை என்பது பொதுவாக ஏறுறுக் கொள்ளப்படுவதல்ல.

திருமணம், ஆண், பெண், கூட்டு வாழ்க்கை, குடும்ப அமைப்பு. கூட்டு சிந்தனை என்பது நமது நாட்டுக் கலாச்சாரத்தின் அடிப்படையாகும். விருப்பத்திற்கு ஏற்றவாறு கூடி வாழ்வதும் பின்னர் பிரிவதும் என்பது காட்டு மிராண்டிநிலையாகும். மிருக நிலையாகும். விலங்குகள், பறவைகளில் கூட ஒருவகை கூட்டு வாழ்க்கையும் இனவிருத்தி முறையையும் காண்கிறோம். அதிலிருந்து அனுபவங்கள் பெற்றுத்தான் மனிதன் கூட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டான். பாரதப் பண்பாட்டில் குடும்ப அமைப்பை உருவாக்கி அதை ஒரு உயர்ந்த பண்பாட்டு நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். ==

குடும்ப அமைப்பு என்பது குழந்தைகளின் பராமரிப்பிற்கும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானதும் ஆதரவானதுமாகும். e

தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி காடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் ஸாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது குடும்பங்களின் தொகுதியென முன்னோர் காட்டியுள்ளோம். குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ தேசியக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனை வாழ்க்கைக்கும் பொருந்தாது. மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து என்றாக வாழாவிட்டால் தகர்ந்துபோய்விடும். இன்று வேறு மனைவி நாளை வேறு மனைவி என்றால் குழந்தைகளின் நிலை

H

129