பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாக்கள் போர் செய்யப் போகும் போது ஐயபேரிக்கை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதி. யார் செய்து வந்தபடியால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. இது குற்றமுற்ற பதமில்லை என்பதற்கு குஜு வேண்டுமானால் மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு பறையர் மஹாசபை என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க. அவர்களை மிருகங்களைப் போல நடத்துவது குற்றமேயொழிய பறையர் என்று சொல்லுவது குற்றமில்லை’ என்று மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

பிற்காலத்தில் சென்னையில் மேற்படி பறையர் மகாசபை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டதாக பல செய்திகள் குறிப்பிடுகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் லண்டனில் இந்திய அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கு வட்ட மேஜை மகாநாடு கூட்டப்பட்ட காலத்தில், அதில் கலந்து கொள்வதற்கு சென்னை பறையர் மகாசபை சார்பாக ரெட்டைமலை சீனிவாசன் கலந்து கொண்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எனவே பறையர் என்னும் சொல் குற்றமுள்ளதல்ல, குறையுடைதுமல்ல. ஆனால் அவர்களைக் குறைந்த சாதியாராகக் கருதுவதுதான் குற்றம். பறையரை சகல விதத்திலும் மேலுயர்த்த வேண்டும். அப்போதுதான் பாரத சமுதாயமும் மேன்மையடையும். நமது நாட்டுப்பாதையரும் ப்ெண்களும் விடுதலை பெறுவார்களானால் பாரத நாடு பெரும் அளவில் முன்னேற்றம் காணும். உலக நாடுகளில் முதன்மை பெறும். வையத்தலைமை பாரதத்திற்கு ஏற்படம் என்பதில் சந்தேகமில்லை “ என்று மகாகவி எழுதிகிறார்.

மகாகவி பாரதியார் ம்ேலும் எழுதுகிறார்.

என்னடா இது ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும் வரை சென்னை பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறாரகள். அடே பார்ப்பானைத்தவிர மற்ற ஜாதியாரெல்லாம் கூட பறையனை அவதிப்பாகத் தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மத விரோதிகளின் பேச்சைக் கேட்டலாமா?

நந்தனாரையும் திருப்பாணாழ்வரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா? பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டனத்து பட்லர்களைப் பற்றிப் பேச்சிலை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நானம் பண்ணச்சொல்லு அவர்களோடு சமத்துவம் கொண்டாடு நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடன்ே ஒன்று

138