பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய நாட்டு விடுதலை பெற்ற பின்னர், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மரியாதை சற்று அதிகரித்திருக்கிறது.

வெளிநாடுகளில் வாழும் இந்திர்களில் இருவகை உள்ளது. ஆங்கிலேய கம்பெனி ஆட்சி காலத்தில் தொலைதுார உஷ்ணப்பிரதேசங்களில் காபி, தேயிலை, ரம்பர், கரும்பு தோட்டங்களிலே வேலை செய்வதற்கு ஒப்பந்தக்கூலிகளாக, இந்திய நாட்டிலிருந்து ஆங்கிலேய தோட் உரிமையாளர்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள், அவர்கள் அந்த நாடுகளிலேயே குடியேறி பின்னர் விடுதலை பெற்ற நாடுகளில் வாழும் இந்திய பாரம்பரையைச் சேர்ந்த மக்கள், தென் ஆப்பிரிக்கா, மொரிஷஸ், பிஜித் தீவுகள், சில தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் சில தீவு நாடுகளில் வாழும் இந்திய பூர்வக்குடிகள் அவர்கள் இப்போது விடுதலை பெற்று சுதந்திர நாடுகளாகி விட்டன. அங்கு வெள்ளையராட்சி நீங்கி சுதந்திர நாடுகளாகிவிட்டன. அந்த நாடுகளில் அந்த நாட்டுப் பிரச்சினைகளாய் தங்கள் பூர்வீக இந்திய கலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் தங்களுடைய கடும் உழைப்பினால் அந்த நாடுகளை வளப்படுத்தி அந்த நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டு, அந்த நாடுகளின் அரசியல் பொருளாதாரவாழ்வில் பங்கு கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் பூர்வீக நாடான இந்திய நாட்டுடன் அரசியல் பொருளுாதார கல்வி கலாச்சார உறவுகளை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

அண்மைக் காலத்தில் இந்திய அரசும் இந்திய மக்களும், வெளிநாடுகளில் வாழும் இரு வகையான இந்திய மக்கள் இந்திய வம்சாவளி மக்கள் ஆகியவற்களின் அரசியல் பொருளாதார கல்வி கலாச்சார நலன்களை மேலுயர்த்துவதற்கு தங்களால் இயன்ற ஆதரவையும் உதவிகளையும் செய்ய வேண்டும் என்ற கருத்து இங்கு வளர்ந்து வருகிறது. இதை மேலும் உயர்த்துவதற்கு நாம் எடுக்கும் முயற்சி மகாகவி பாரதியின் கனவை நனவாக்குவதாகும். அவருடைய ஆத்மாவை சாந்தியடைச் செய்வதாகும். அதற்கு மகாசக்தி துணை செய்க.

சுதந்திரம் சுதேசி இயக்கம் பற்றி மகாகவி பாரதி பேசும் போது, எழுதும் போது அரசியல் சுதந்திரம், ஜனநாயக வளர்ச்சி, சமுதாய சமத்துவம் சமவாய்ப்புகள் சமூக முன்னேற்றம் பற்றி மகாகவி பாரதி ஆழ்ந்து சிந்தித்தும் நடைமுறை அனுபவத்தை வைத்தும் பல அறிய கருத்துக்களையும் முல் வைத்திருக்கிறார். அவைகளில், நமது சமுதாயத்தின் உற்பத்தி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கல்வி கலாச்சார வளர்ச்சி, நமது நீதி நிர்வாகம் கிராம நிர்வாகம், இந்திய மக்களின் உடல் வலிமை பற்றியெல்லாம் விரிவாகப்

பேசுகிறார்.

153