பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தத் தத்துவங்களில் பயிற்சி பெற் சில இந்திய அரசியல் சிந்தனையாளர்கள் இங்கு மதச்சார்பின்மை என்றும் திருகலான தத்துவத்தை நமது நாட்டிலும் புகுத்தி விட்டார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்ட உச்ச நிலை அடைந்த போது இந்திய நாட்டில் வகுப்புக் கலவரங்கள், இந்து, முஸ்லிம் கலவரங்களும் ஏறுப்பட்டு பெரும் படுகொலைகள் நிகழ்ந்தன. அப்போது இந்திய நாட்டில் எழுந்த இந்திய யூனியன்-பாகிஸ்தான் என்று இரு அரசுகள் தோன்றின. இரு அரசு மதச்சார்பற்ற அரசுகள் என அறிவித்தன. இந்திய யூனியன் மதச்சார்பின்மை என்றும் தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானும் பின்னர் அதிலிருந்து பிரிந்த பங்களாதேசும் இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. அந்த நாடுகளில் கோடிக்கணக்கான இந்து சீக்கியர்கள் எந்தவிதமான மத சுதந்திரமும் வழிபாட்டு சுதந்திரமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது ஒரு பக்கம்.

மறுபக்கம் பாரத தேசத்தில் (இந்திய யூனியன்) இன்றைய நிலைமை என்ன முஸ்லிம் என்றால் சிறுபான்மை, கிறிஸ்தவர் என்றால் சிறுபார்வை, ஹிந்து என்றால் மதவெறி பிடித்தவன் சிறுபான்மைக்கு எதிராவன் என்று பட்டம் சூட்டப்படுகிறது என்பதை குறிப்பிட்டோம்.

எனவே, ஹிந்து தர்மத்தின் உயர்வான மேலான தன்மையை நாம் உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதிருக்கிறது. அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது. இதற்கு மகாகவி பாரதியை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

உலகின் நாகரிக வளர்ச்சிக்கு சிந்தனை வளர்ச்சிக்கு அறிவு வளர்ச்சிக்கு ஹறிந்து தர்மம் அளித்துள்ள பங்கு மகத்தானது.

வேதங்களைப் போன்ற சிறந்த நூல்கள் உலகில் வேறு எங்கு மில்லை. வேதங்கள் ரிக்யஜூர், சாமம், அதற்வனம் என்னும் நான்கு என்று அறியப்பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் மிகவும் பழைமையானது. அவ்வேதம் தனியான மொழியில் அமைந்திருக்கிறது. அதை வேத மொழி என்று கூறினார். அவைகளை முதலில் மக்கள் மொழியில் கொண்டு வர வேண்டும். அதை வேத விற்பனர்கள் முதலில் செய்து முடிக்க வேண்டும். அந்த ஞானக்களஞ்சியத்தை உலகம் முழுவதும் உணரச் செய்ய வேண்டும்.

நமது நாட்டின் அமுல்படுத்த அறிவுக் களஞ்சியங்களை, உபரிடதங்கள் புராணங்கள், இராமாயணம், மகாபாரதம் என்னும் இரு மகத்தான இதிகாசங்கள், பின்னர் தோன்றிய அறிவியல் கருத்துக்கள், கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம், வத்ஸாயனரின் காமசூத்திரம், ஆர்யபட்டார், பாஸ்கரன் மற்றும் இன்று வரையிலுமான அறிவியல் மேதைகள், கணித மேதைகள்,

156