பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரல் மார்க்ஸ் விளக்கிக் கூறுகிறார்.

இவ்வாறு மனித சமுதாயத்தில் புராதன சமுதாயம், நிலப் பிரபு த்வ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் ஆகிய சமுதாய அமைப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி அதிலிருந்து சோவிலிஸ் சமுதாயம் ஏற்படும். அதற்குரிய வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. அந்த வரலாறு பூர்வமான வர்க்கப் போராட்டத்திற்கு நவீன தொழிலாளி வர்க்கம் தலைமையாக வரலாறு பூர்வமாக அமைகிறது என்று காரல் மார்க்ஸ் தனது வரலாற்றியல் பொருள் முதல் வாத தத்துவ ஞானத்தில் குறிப்பிடுகிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய போராட்டங்களுக்கான சமுதாய நீர்ப்பநத்ங்கள் ஏற்படம். அத்தகைய போராட்டங்கள் நிகழும். அதில் தொழிலாளிவர்கம், இதர அனைத்து மக்களையும் ஒன்று திரட்டித் தலைமை தாங்கும். தொழிலாளி வர்க்கம் இறுதியில் வெற்றி பெறும். அப்போது வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் மறையும்.

அதிலிருந்து வேறுபாடுகள் இல்லாத ஒரு புதிய சமுதாயம் சோஷலியஸ் - கம்யூனிஸ் சமுதாயம் அமையும் என்று காரல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

தொழிலாளர் என்னும் சொல்லுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் விலக்கத்தையும் கொடுத்து, அந்தத் தொழிலாளர்களை ஒருவர்க்கமாக விளக்கிக் கூறி, அதன் வரலாற்றுக் கடமை எடுத்துக்காட்டி ஒரு புதிய சமுதாய அமைப்பின் தலைமையாக அந்தத் தொழிலாளி வர்க்கத்தை தொகுத்துக் கூறுகிறார் காரல் மார்கஸ்.

காரல் மார்க்ஸ் தனது இந்தத் தத்துவ ஞானக் கருத்துக்களை அதாவது தர்க்கவியல் பொருள் முதல் வாதம் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் என்னும் தத்துவ ஞானக் கருத்துக்களை ஐரோப்பிய வரலாற்றின் மிகவும் கடுமையான சூழ்நிலைமைகளில் வெளியிட்டார். இவை தொடர்பான பல நூல்களையும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த கடுமையான வர்க்கப் போராட்டங்களுக்கு இடையில் கருத்துப் போராட்டங்களுக்கு இடையில் எழுதி வெளியிட்டார். அவர் ஐரோப்பாவில் எந்த ஒரு நாட்டிலம் அமைதியாக வாழ முடியவில்லை. கடைசியில் அவருடைய நெருங்கிய நண்பர் பிரடரிக் ஏங்கல்ஸ் ஆதரவில் அவருடைய பாரமரிப்பில் லண்டனில் குடியேறினார்.

ஏங்கல்ஸின் ஆலோசனையின்படி தங்கள் தத்துவஞான சிந்தனைகளின் அடிப்படையில் பொருளாதாரப் படிப்பில், பொருளாதார ஆராய்ச்சியில் ஈடுபட்டார். நவீனப் பொருளாளதார ஆராய்ச்சிக்கு பிரிட்டனும், அதன்தலை நகரமான லண்டனும் மிகவும் சிறந்த களமாகவும் அமைந்திருந்தது.

பிரிட்டனில் நவீன எந்திரத் தொழில்கள் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்தது. முதலாளித்துவப் பொருளாதார சகலதுறைகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கம்

168