பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி அடுத்தாற் போல குறிப்பிட்ட தொகை வைத்து தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களுடைய உழைப்புச் சக்தி விலைக்கு வாங்கப்படுகிறது. இங்கு உழைப்பு சக்தியே ஒரு பண்டமாகிறது. உழைப்பு சக்தி என்னும் உயர்வான ஒரு அபூர்வமான பண்டம், ஒரு அசையும் மூலதனம், தொழிற்சாலையின் இதர பகுதிகளான அசையாமூலதனத்தின் மீது படும் போது அங்கு உற்பத்திப் பொருள் என்னும் ஒரு புதிய பண்டம் விற்பனைக்குத் தயாராகிகிறது. இப்புதிய பண்டத்திற்கு புதிய மதிப்பாக விலை மதிப்பு கிடைக்கிறது.

தொழிலாளர்களின் உழைப்பு சக்தி என்னும் அபூர்வமான பண்டத்திற்குக் கொடுக்கப்படும் கூலி என்னும் மதிப்பு உற்பத்திப் பண்டத்தின் விலை மதிப்பை மூலப் பொருள் மதிப்பிலிருந்து பல மடங்கு உயர்த்திவிடுகிறது. அது லாபம் என்னும் பெயரில் வெளிப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பு சக்தியின் மூலம் கிடைக்கும் உபரி. ம்திப்புதான் லாபமும் லாபத்தின் அடிப்படையுமாகும் என்பது மர்ர்க்ஸின் கருத்து கண்டுபிடிப்புமாகும்.

தொழிலாளர்களின் உழைப்பு சக்தியின் உபரி மதிப்பு தான் லாபமும் லாபத்தின் அடிப்படையும் என்று காரல்மார்க்ஸின் அரசியல் பொருளாதார கண்டுபிடிப்பு முதலாளித்துவ அரசியல் பொருளாதார இயக்கத்தில் முக்கிய இடத்தை பிடித்து விட்டது. இதன் காரணமாக தொழில் முதலாளிகளுக்கு ஒருவித நடுக்கம் ஏற்பட்டு விட்டது. காரல் மார்க்ஸின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு ஐரோப்பிய முதலாளித்துவம் முழுவதையும் பலமாக அச்சுறுத்திவிட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள இராணுவ பலமும் ஆயுத பலமும் சேர்ந்து வந்து தங்களை எதிர்த்து வந்தாலும் அச்சப்படாத முதலாளித்துவம் காரல்மார்க்ஸின் உபரி மதிப்பு தத்துவத்தைக் கண்டு நடு நடுங்கியது என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் கிளர்ச்சிகள் போராட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஐரோப்பிய முதலாளிகளுக்கிடையிலான போட்டியும் பொறாமையும் மோதலும் முட்டாளும் அதிகரித்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான உலகப் போராக வெடித்தன. இப்போரில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டதோடு அவைகளின் காலனி நாடுகளையும் ஈடுபடுத்தியது. அதனால் அப்போர் உலகப் போரின் வடிவத்தை எடுத்தன.

1914 ஆம் ஆண்டில் தொடங்கிய இப்போர் 1918 வரை நீடித்து ஏராளமான உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் உண்டாக்கியது. இப்போரின் விளைவாக போரில் வெற்றியடைந்த நாடுகளும் தோல்வியடைந்த நாடுகளும் பலவீனமடைந்தன. போரில் பங்கு கொண்ட இரு தரப்பு

170