பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமத்துவக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இவர்கள் முதல் போட்டார்களேயெனின் நாம் பாடுபட்டோம். எல்லோருக்கும் லாபம் ஸ்மானமாகவே இருக்க வேண்டும்’ என்று விரும்பலாயினர். எனினும் திடீரென்று சம்பாகம் கட்கத்துணியாமலும் அதனைப்பெறுதல் சாத்தியமில்லை யென்று நிச்சயமாகத் தெரிந்தபடியாலும் சிறிது சிறிதாக்க் கூலி உயர்வுக்குக் கலகம் பண்ணிக் கொண்டுவந்தார்கள்.

வாஸ்த்திற்கு லெளகர்யமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றார்கள். தொழிலாளிகள் கிழவரான இடத்திலும் நோயாளியான இடத்திலும் இனாம் சம்பளம் கொடுக்க வேண்டுமென்றார்கள் தங்களுக்கு தம்முடைய மக்களுக்கும் படிப்பு சொல்லிவைப்பதற்குரிய சாதனங்கள் செய்ய வேண்டும்மென்றார்கள். படிப்படியாக இவ்வேண்டுதல்களை முதலாளிகள் தெரிந்துகொண்டே வந்திருக்கிறார்கள். எனினும் இத்தகைய போராட்டங்களில் இன்று வரை தொழிலாளிகளே வெற்றியடைந்து கொண்டுவருகிறார்கள். இதற்குரிய காரணங்கள் பல, இவற்றைக் குறித்துப் பிந்திய பகுதிகளில் விஸ்தாரமாக எழுதுகிறேன்’ என்று மகாகவி பாரதி எழுதுகிறார். தொழிலாளர் பெருமை:

ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட வேற்றுமைகள் இப்போது மிகவும் முற்றிப்போய்விட்டன. இந்நிலையில் அவ்விரண்டு ககதியாருக்குமுள்ள மனஸ்தாபங்களையெல்லாம் தீர்த்து அவர்களில் ஒர் திறத்தாரால் மற்றொரு திறத்தாருக்கு விளையும் பரஸ்பரமான கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அவர்களுக்குள்ளே சமாதானமும் ஒற்றுமையுணர்வும் ஏற்படுத்துதல் மிகவும் சிரமமான காரியம், இஃது வெறுமே சாதாரண மனித யத்தனத்தால் நிறைவேறக்கூடியதாகத் தோன்றவில்லை. உலகத்தில் இதுவரையில்லாத புதிய தெய்வீக சக்திகள் கொண்ட அவதார புரிஷர்கள் தோன்றினால் அவர்களே ஐரோப்பாவில் முண்டிருக்கும் இந்தப் பெரிய விபத்துக்கு ஸ்மாதான வழிகளிலே நிவர்த்தி செய்யக்கூடும்.

‘சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பியத் தொழிலாளர் சிறிது சிறதாக சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கும் உரிமைகளுடனே அவர்கள் தருப்தி கொண்டிருக்க வேண்டும். இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளேமிகவும் அதிகம். இவற்றைக்கூட இன்னும் குறைத்தால் நல்லது. இப்படியிருக்க தொழிலாளர் இன்னும் அதிகமான உரிமைகள் கேட்பதற்கு நாம் கொஞ்சமேனும் உதவி சாய்க்கக் கூடாது. என்று பெரும்பாலான முதலாளிகள் நினைக்கிறார்கள். தொழிலாளரோ அங்குராஜாங்க அதிகாரத்தைத் தமது வசமாகச் செய்து கொண்டாலன்றி அதாவது, தங்கள் இஷ்டப்படி சட்டம் போட்டு முதலாளிகளினுடைய பணத்தைத் தங்கள்

191