பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தியடையவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முதலாவது காரணம் ஹிந்து ஜன சமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பது போல அத்தனை தாரதம்மியம் இல்லை. முதலாளி - தொழிலாளி, செல்வன் ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவு விரோதமும் நம்தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பது போல நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது லண்டன் நகரத்தில் பிச்சைக்காரனைப் போலீஸ்காரன் பிடித்துக் கொண்டுபோவான். பிச்சைக் குற்றத்திற்காக மாஜிஸ்திரோட தண்டனை விதிப்பார். நமது தேசத்தில் தேஹி’ என்று கேட்பவனுக்கு ‘நாஸ்தி’ என்று சொல்கிறவனை எல்லோரும் சண்டாளன் என்று தூவிப்பார்கள்.

“இங்கிலீஷ் நாகரிகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்தி கூர்மைக்கு இடையாளமென்று நினைக்கிறார்கள். பிச்சைக்காரன் வந்தால், ‘ஏண்டா, தடியன் போலிருக்கிறாயே பிச்சை கேட்க ஏன் வந்தாய், உழைத்து ஜீவனம் பண்ணு’ என்று வாயினால் சொல்லிவிடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும் வேலையகப்படாமல் எத்தனை லட்சம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரிக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.

H

சோம்பேரியாக இருப்பது குற்றம் தான் பிச்சைக்கு வருவோர்களில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதையெல்லாம் நான் மறுக்கவில்லை, ஆனாலும், பிச்சை என்று கேட்டவனுக்கு ஒருபிடி அரிசி போடுவதேமேன்மை. வைது துரத்துதல் கீழ்மை இதில் சந்தேகம் இல்லை. -

‘சோம்பேரி பிச்சைக்காரன் மாததிரம்தானாசோம்பேறி பணம்வைத்துக் கொண்டு வயிறு நிறையத்தின்று நின்று யாதொரு தொழிலும் செய்யாமல் துங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன்பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிறு நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியா திருத்தலும் திருட்டும் கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யவும் அநியாயம் குறைவு செல்வர் செய்யும் அநியாயம் அதிகம் -

ஏழைகளே இல்லாமல் செய்வது. உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல்யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகள்ை நசுக்குவதிலும் கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஐரோப்பிய இயந்திரத் தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும்

198