பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழ்மைத்துன்பத்தை ஸமாதான நெறியாலும் மாற்றக் கூடிய உபாய மொன்றைதாம் கண்டு பிடித்து நடத்துவோமானால், அதனின்றும் நமது நாடு பயனுறுவது மட்டுமேயன்றி உலகத்தாதெல்லாரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மையடைவார்கள்.

பசி பட்டினியைப் போக்க வேண்டும்

மனித உடம்பில்மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் பசி என்பது பொது அனைவருக்கும் பசியைப் போக்க உணவளிக்கவேண்டும். பசிக்கு உணவளிக்கும் போது, வயிறு நிரம்பி பசி நிரம்பியவுடன் மேலும் உணவு வரும்போது போதும் என்று கூறுகிறோம். போதும் என்று வயிற்றுக்கு உணவளிக்கும் போது தான் கூறுகிறோம். வேறு எதையும் போதும் என்று கூறுவதில்லை. பசிக்கு போதிய உணவு இல்லாத போது பட்டினி நிலை ஏற்படுகிறது. பட்டினியைப் போக்குவதற்கு மனிதன் தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வந்திருக்கிறான்.

பாரதத்தில் அந்நிய ஆட்சி இருந்தபோது பசி பட்டினியால் மக்கள் மிகவும் அதிகமாக அவதிப்பட்டிருக்கிறார்கள் பசிபட்டினியால் அவதிப்பட்ட மக்களுக்கு பட்டினியைப் போக்க வேண்டும் அன்னதானங்கள் செய்ய வேண்டும். அன்னசாலைகள் நிறுவ வேண்டும். அன்ன சத்திரங்கள் கட்ட வேண்டும் வயிற்றுக்கு சோரிட வேண்டும் இங்கு வாழும் மாந்தருக்கெல்லாம் என்று வள்ளலார் இராமலிங்கரும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரும் மனமுறுகி நெஞ்சுறுகிப் பாடியிருக்கிறார்கள் பேசியிருக்கிறார்கள். அன்னசாலைகள் கட்டி அன்னதானம் செய்வதை ஒரு இயக்கமாகவே வள்ளலார் நடத்தியிருக்கிறார்.

ஆலயங்களில், தர்ம சாலைகளில் பொது இடங்களில், சாலை ஓரங்களில் சந்தை கூடும் இடங்களில் திருவிழாக்களில் அன்னதானம், குடிநீர்கொடுத்தல் பாரத நாட்டின் பண்பாட்டில் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் அரசின் கடமைகளின் ஊர் நிர்வாகத்தின் கடமைகளில் முதன்மையானது மக்களுக்கு உணவளித்தலாகும்.

நாட்டில் நாட்டின் பகுதிகளில் இயற்கை விளைவுகளால் பஞ்சமேற்படும் போது மக்களுக்கு உணவளிப்பது சமுதாயத்தின் முதற்கடமையாக நமது நாட்டின் சமூக நீதி பொது நீதி வகுக்கப்பட்டிருக்கிறது. நாடுகளுக்கிடையில் ராஜாக்களுக்கிடையில் போர்கள் ஏற்படும் கால்ங்களிலும் மக்களுக்கு பசி பட்டினி ஏற்பட்டு நிவாரணங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் அவ்வப் போது மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் இக்கஷ்டங்களை மக்கள் தங்கள் சொந்த் முயற்சியாலும் அரசு உதவியாலும் தளவந்தர் உதவியாலும் இந்தக் கஷ்டங்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன.

பாரத நாட்டில் ஏற்பட்ட பசி பட்டினி இன்னல்கள் பெரும்பாலும்

+

208