பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பிய தொழிலாளர்களில் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் சற்று அதிகமான சலுகைகளை வசதிகளைப் பெற்றார்கள் ஆயினும் ஐரோப்பிய தொழிலாளர்களின் கிளர்ச்சி ஒயவில்லை.

இதற்கிடையில் பிரிட்டன் பிரான்ஸ் அமெரிக்கா ரஷ்யா ஒரு பக்கம், ஜெர்மனி இத்தாலி துருக்கி, ஜப்பான் ஆஸ்திரியாஹங்கேரி மறுபக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் தொழில் போட்டி வியாபாரப் போட்டி, காலனி ஆதிக்கப் போட்டி ஆகியவை முற்றி இந்த ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் 1914-ஆம் ஆண்டு போர் மூண்டது. இந்த நாடுகள் தங்கள் காலனி நாடுகளையும் போரில் ஈடுபடுத்தியது. அதனால் போர் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவி உலகப் போராக வடிவெடுத்து ஒரு பயங்கரமான உலகப் போராக நடைபெற்றது. இது முதலாவது உலக மகாயுத்தம் என்று வரலாற்றில் இடம் பெற்றது. இந்தப் பெரும் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்கள் ஆள்பலம் ஆயுத பலம் அரசியல் பலம் ராஜதந்திரபலம் அனைத்தையும் ஈடுபடுத்திப் போரில் மூழு மூச்சில் ஈடுபட்டது.

இந்த நேரத்தில் ரஷ்ய சாம்ராஜ்யம் ஜார் ஆட்சியின் கீழ் மிகுந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள்ளாயிருந்தது.

உலகப் பேர்ரில் ஈடுபட்ட போது அந்த கட்சி மேலும் அதிகமான அரசியல் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிய தேற்பட்டது. ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதியில் தான் தொழில்களெல்லாம் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருந்தன. நிலப்பிரபுக்கள் மற்றும் மத மட நிறுவனங்கள் மக்கள் மீது கொடுமையான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்தின.

‘இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன்

ஜாகரனும் பேரிசைந்தபாவி

சாணின்றித் திட்டார் நல்லோரும்

சான்றோரும் தருமந்தன்னைத்

திரணமெனக் கருதிவிட்டான் ஜார் மூடன்

பெய் சூது தீமை யெல்லாம்

அரணியத்திற் பாம்பு போல மலிந்து வளர்ந்

தோங்கினவே அந்த நாட்டில்

உழுது விதைத் தறுப்பாருக் குணவில்லை

பிணிகள் பலவுண்டு; பொய்யைத்

213