பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்யத்தை சந்தைக்குக் கொண்டுவருவது கடினமாக இருக்கும்.

அத்துடன் வசதியுள்ள வளர்ச்சி படையந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் தேவையைக் கருதி, உணவுதான்யத்தை தேவைக்கு மேல் அதிகமாக கள்ளச் சேமிப்பு செய்து கொள்ளும் நிலைமையும் ஏற்படலாம்.

காபி, தேயிலை, ரப்பர், ச்ர்க்கரை, வாழைப்பழ நாடுகள் தங்கள் பொருள்களை உலகச் சந்தைக்குக் கொண்டுவரும் போது விலை பேரத்தில் பாதிப்பு ஏற்படலாம். தான்யம் மற்றும் இதர உணவுப் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதேற்படலாம். இப்போதே சில ஆப்பிரக்க தென் அமெரிக்க நாடுகளில் உணவு தான்யபற்றாக் குறையின் கடுமை அதிகரித்து வருகிறது. பட்டினி அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதைவைத்தே வளர்ச்சியடைந்த நாடுகள் உலக வர்த்தக சபையில், விவசாய உற்பத்திப் பொருள் வாணிபத்தில் தங்கள், ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

உணவு உற்பத்தியை அதிகரித்தில் விவசாயப் பொருள் உற்பத்தியைப் பெருக்குவதில், விவசாயப் பொருளாதாரத்தை அபிவிடுத்தி செய்வதில், விவசாயத்திற்குச் சாதகமாகவும் துணைத் தொழிலாகவும் உள்ளகால் நடைச் செல்வங்களைப் பெருக்குவதில், விவசாய உற்பத்திப் பொருள் சார்ந்த தொழில்களைப் பெருக்குவதில் பாரதத்திற்குள்ளவாய்ப் புகள் அதிகம். இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தினால் உலகத்திற்கு உணவளிக்கும் புண்ணிய காரியத்தை பாரதம் நிறைவேற்ற முடியும்.

முதல் படியாக நீர்ப்பாசம் தென் மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே சேரசோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களாலும் கட்டப்பட்டிருக்கும் சிறிய, நடுத்தர, கண்மாய் ஏரிகள், பாசன குளங்கள், சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டவை உள்ளன. மழைகாலங்களில் இந்த செயற்கை நீர்நிலைகள் எல்லாம் ப்ல்நோக்கு கொண்டவை இந்த செயற்கை நீர் நிலைகள், நீர்ப்பாசனம், நிலதடி நீர் சுரத்தல், சுற்றுச் சூழல் தட்பவெப்ப நிலைகளைச் சம்ப்படுத்தல், இந்த நீர் நிலைகளின் கரைகள் அனைத்திலும் மரங்களை வைத்து ஆம்மாங்களை வளர்த்துப் பாதுகாக்கவேண்டும். இந்த நீர்நிலைகள் நிரம்பிய பின்னர் மிச்ச நீரை பெரிய அணைகளில் நீர் நிலைகளில் சேமித்து வைக்க வேண்டும். இதை ஒரு தேசீயக் கொள்கையாக உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக மகராஷ்டிரம் மத்தியப் பிரதேசம் ஒரிஸ்ஸ் மாநிலங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைவாக ந்தி நீர் இணைப்பு திட்டத்தை எடுத்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு இந்த நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினால் பாரதம் நித்யாவைப் போல் பத்து இந்தியாவுக்கு சோறு போட முடியும். பத்து இந்தியாவிற்கு மின்சாரம் கொடுக்க முடியும்.

238