பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வீமன் கூறிய வார்த்தைகள்

(இவை மகாகவி பாரதிக்கே உரியனவாகும்)

‘'சூதர் மனைகளிலே-அண்னே! தொண்டு மகளிருண்டு

சூதில் பனயமென்றே - அங்கோரி

தொண்டச்சி போவதில்லை.

‘ஏது கருதி வைத்தாய்? அண்ணே

யாரைப் பணயம் வைத்தாய்...? -

மாதர் குலவிளக்கை-அன்பே

வாய்ந்த வடிவழகை

‘பூமியரசரெல்லாம் - கண்டே

போற்ற விளங்குகிறாள்

சாமி புகழினுக்கே வெம் போர்ச்

சண்டனப் பாஞ்சாலன்

‘அவன் சுடர் மகளை- அண்ணே

ஆடியிழந்து விட்டாய்

தவறு செய்து விட்டாய்- அண்ணே

தருமங்கொன்று விட்டாய்

‘சோரதிற்கொண்டதில்லை. அண்னே

சூதிற்படைத்த தில்லை

வீரத்தினாற் படைத்தோம்- வெப்போர் வெற்ற

வெற்றயினாற் படைத்தோம்

‘சக்கரவர்த்தி யென்றே - மேலோந்

43