பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்யசம்பத்து.

எனவே ஆர்யசம்பத்தாவது, ‘'ஹிந்துஸ்தானத்தின் நாகரிகம். இந்த சம்பத்தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த சம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் இந்த ஜாதியை செல் அரித்துவிடும். இந்த ஆர்யசம்பத்தை உலகம் உள்ளவரை சமாகூடிணம் செய்து மேன் மேலும் ஒளியும் சிறப்பும் உண்டாகும்படி செய்யும் கடமை தேவர்களால் பாரத ஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும். இடையில் நமக்கு நேர்ந்த கேடு

இந்த ஆர்யசம்பத்தை நாம் பல பல நூற்றுக்களாக ஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்றாண்டுகளாக இதில் துருப்பிடிக்க இடம் கொடுத்து விட்டோம். தேவர்கள் நமக்குக் கொடுத்த கடமையை கர்வத்தாலும், சோம்பலாலும் சிறுமையாலும் உல்லங்கனம் செய்யத் தொடங்கிறோம். தேவர்கள் ‘இந்தப் பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக்கடவது என்று ஆசீர்வாதம் பண்ணினார்கள்’ என்று அந்தக் கட்டுரையைப் பாரதியார் தொடங்குகிறார்.

இங்கு இந்த ஆர்ய சமபத்தை நாம் பல நூற்றாண்டுகளாக ஆதரித்துக் கொண்டு வந்தோம் அன்று பாரதியார் குறிப்பிட்டிருப்பது கவனிக்கதாகும். அதாவது பாரத தேசத்து நாகரிகம் பல பல நூற்றாண்டுகள் தொன்மையானது. நமது கவிதைகள், சிற்பம் சங்கீதம் முதலியவை பல பல நூற்றாண்டுகள் தொன்மையானது. இவைகளைச் சரியாகப் பராமரித்து வருவதிலே இடைக்காலத்திலே நமக்கு கவனக்குறைவு ஏற்பட்டு நமது பாரத சமுதாயம் பலவீனப்பட்டு விட்டது. அதையே பாரதி செல் அரித்து விட்டது என்று குறிப்பிடுகிறார்.

  • ‘சவியுறத் தெரிந்து தண்ணென் றொருக்கமும்

தழுவிச்சான்றோர்

- கவியெனக் கிடந்த கோதவரியினை

வீரர்கண்டார்’

|

என்றும் கம்பன் பாடியிருக்கிறான்.

‘சவி என்பது ஒளி. இது வட சொல். கம்பன் காலத்தில் அதிக வழக்கத்திலிருந்தது போலும், “ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகித் தண்ணெள (குளிர்ந்து) நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போலக் கிடந்தது கோதாவரி நதி’ என்று கம்பன் வர்ணனை செய்கிறார். எனவே கவிதையில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும் என்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை.

59