பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர்கள் அருள் புரிந்திருக்கிறார்கள். அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல் வாழ்த்துகிறோம்’ என்று மகாகவி எழுதுகிறார்.

மகாகவி பாரதி யாருடைய உரைநடைக்கட்டுரைகளிலே இந்தக் கட்டுரை மிகவும் சிறந்த மிகவும் சிறப்பான கட்டுரைகளில் ஒன்றாகும்.

மகாகவி பாரதியார், ‘பாரத தேசத்தின் விடுதலையைப் பற்றி சுதந்திரத்தைப் பற்றி சிந்திக்கும் போது அன்னிய ஆட்சியை அகற்றுவது பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. ஆயிரம் ஆண்டு கால அன்னிய ஆட்சி அன்னிய ஆதிக்கம் கொடுமைகள் காரணமாக பாரத நாட்டின் சுதந்திரம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அதன் பொருளாதாரம், வாணிபம், கலாச்சாரம், சுயாட்சி மட்டுமல்ல, நமது அறிவுச் செல்வம், நமது ஒழுக்கச் செல்வம், பொருட் செல்வம், நாகரிகம், பண்பாடு, கவிதை, சங்கீதம், நமது சிற்பம், கட்டிடக்கலை, ஜனக்கட்டு, ஜனநீதி நமது சாஸ்திரங்கள், நமது கல்வி முறை, நமது சிறந்த பழக்க வழக்கங்கள் வீரம், தீரம், அனைத்தும் பாதிக்கப்பட்டு நமது சமுதாயம் l ] III fy கொடிய நோய்களுக்கிரையாக்கி, நோஞ்சான நிற்கும் நிலை அனைத்தும் நீங்கி, ஒரு சக்தி மிக்க வல்லமைமிக்க ஆரோக்கியமும் அறிவாற்றல் மிக்க நாடாக வெளிப்பட வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும்” என்று விரும்பினார்.

இதுவே மகாகவி பாரதியின் பரிபூரண சுதந்திரத்தின் மகா வடிவமாகும்.

பாரததேசத்தின் மகா வடிவத்தைப் பற்றிய மகாகவியின் சிந்தனையும் கருத்துக்களும் ஆயிரம் மகாலத்திற்கு மேல் பாரதத்திலும் உலகிலும் நிலைத்து நிற்கும். தழைத்து, ஒங்கும் பாரத சமுதாயத்துடன் சேர்ந்து மனித சமுதாயம் முழுவதும் உயிர்ப்பொருள்கள் அனைத்தும் நிடுழி வாழ்வதற்கான சிந்தனையாக மகாகவி பாரதியின் சிந்தனை நிலைத்து நிற்கும். இதற்கு பாரதம் லோக குருவாக அமையும் என்பது பாரதியின் சிந்தனையாகும்.

லோக குரு:

சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியான டோக்கியே நகரத்தில் ஸாம்ராஜ்ய சர்வகலாசாவை சங்கத்தாரின் முன்பு ரவீந்திரநாதன் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது விவேகானந்தர் செய்து விட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரன் ஒருவர்.

விவேகானந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் நாட்டினார். ரவீந்திரர், ‘உலக வாழ்க்கையும் உண்மையான கவிதையும் ஆத்ம ஞானமும் ஒே தர்மத்தில் நிற்பன என்பதை வெளிநாடுகளுக்குச் செல்லும் பொருட்டாக பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.

  • பாரத தேசமே லோக குரு என்ற செய்தி ஏற்கனவே பல ஜப்பானிய

61