பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும் சீக்கிரத்தில் தமிழுக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கம் ராஜாங்க உரிமைகளிலே வசியம் பங்கு, கொடுக்,

ஞக கு . அதி! o o வேணடும்.

பாரதியின் சிந்தனை இதில் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதைக் காண்கிறோம். இன்றைக்கு நூறாண்டுவுகளுக்கு முன்னர் பாரதி கூறியுள்ள கருத்துக்கள் இன்று பெரும்பாலும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

அரசியலில் பாரதம் பெண் பிரதமரையும் மாநில முதல் அமைச்சர்கள் பலரையும் கண்டிருக்கிறது.

  • தமிழ்நாட்டு மாதருக்கு

தமிழ்நாட்டு மாதருக்கு என்று தலைப்பிட்டு பாரத நாட்டின் மாதர் குலத்திற்கென மகாகவி பாரதி எழுதுகிறார். o

இந்தியா தேசத்துஸ்திரிகள் இங்குள்ள ஆண் மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளிநாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒரு உபாயமாகும். திருஷ்டாந்தமாக சில வருஷங்களுக்கு முன்பு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ‘இந்தியா நாகரிககக் குறைவான தேசம் என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது.

குறிப்பாகச் சில மூடப் பாதிரி மார்களும் கொள்ளை வியாபார நோக்கங்கொண்டு, நமது நாட்டைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களும் அவ்வாறு பிரசாரம் செய்து தங்களுடைய கொள்ளையை நியாயப்படுத்திக் கொள்வதற்காக அவ்வாறு பிரசாரம் செய்த காரணத்தால் சாதாரண மக்கள் உண்மை புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள்.

‘மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிடதங்கள், ஸாங்கியம் யோகம், முதலிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்) காளிதாசன் முதலிய மகாகவிகளின் காவியங்கள், ராமாயணம், பாரதம், பஞ்சதந்திரம் முதலிய நீதி நூல்கள். இவற்றை மூலத்திலும், மொழி பெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய் அதலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞானத் தெளிவும் நாகரிகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர். இங்ஙனம் மேற்கு தேசங்களின் பதினைந்தாயிரம் அல்லது லட்சத்தில் ஒருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும் அந்நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் இந்தியா தேசத்தார் ஏறக்குறைய அரை காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்’ என்ற பொய்க்

கொள்கையே குடி கொண்டிருந்தது.

அப்பால் சுவாமி விவேகானந்தரும் பின்னிட்டு ரவீந்திரநாத் தாகூர், ஜகதீச

65