பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத மாத நவரத்தின மாலை என்னும் அற்புதமான கவிதையில் அறப்போரின் தனிச்சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.

‘அன்னையே அந்நாளில் அவனிக்கெல்லாம் ஆணி முத்துப் போன்ற மணி மொழிகளாலே பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,

பாவு புகழ் புராணங்கள்

இதிகாசங்கள்’

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம் என்னென்று புகழ்ந்துை ரப்போம் அதனை இந்நாள்

மின்னுகின்ற பேரொளி காண்! காலம் கொன்ற,

விருந்து காண் கடவுளுக்கோர் வெற்றி காணே!

இத்தகைய அற்புதமான பாடலுக்கு ஈடாக உலகில் எங்கும் கவிதையில்லை இன்னும்,

“சுடுதலும், குளிரும் உயிர்க்கில்லை. சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை எடுமினோ அறப்போரினை என்றான்.

எங்கோமேதகம் ஏந்திய காந்திய என்று மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்ட வழி முறையைப் போற்றிப் புகழ்ந்து அப்பாடலில்

குறிப்பிடுகிறார்.

“பூரணமா ஞானப் புகழ் விளக்கை நாட்டுவித்த பாரதமா தேவியெனப்பாடு என்று பாரதி அப்பாடலை முடிக்கிறார்.

இங்கு பாரதி பாரத தேசிய சிந்தனைக்கு அனைத்தளாவிய புதிய தொரு விளக்கம் தருவதைக் காண்கிறோம்.

அவர் காலத்தில் பாரதம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அதைக் கண்டு ‘நெஞ்சு பொறுக்தில்லையே...’ என்று பாடுகிறார்.

‘நண்ணிய பெருங்க்லைகள் பத்து

நாலாயிரம் கோடி நயந்து நின்ற