பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேருமென்று நாம் சிறிதேனும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலுள்ள நாகரிகங்கள் எல்லாவற்றிலும் நம்முடைய நாகரிகம் அதிக சக்தியுடையது. இது மற்றெந்த நாகரிகத்தையும் விழுங்கி ஜீரணித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. ஆதலால் ஐரோப்பிய நாகரிகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன் உண்மையியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைனக் காட்டிலும் அதிக சக்தியும் ஒளியும் பெற்ற விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்து கொண்டாவன்றி இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்கு நடைபெறாது.

தமிழ்நாட்டு சகோரதரிகளே!

உங்களிடம் எத்தனையோ அரிய திறமைகளும் தந்திரங்களும் உயர்ந்து இருந்த போதிலும், கல்வியின் பாவுதல் அதிகமில்லாத படியால் அவ்வப்போது வெளியுலத்தில் நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் நீங்கள் அறிந்து கொண்டு அதற்குத் தக்கப்படி நடக்க இடமில்லாமல் போகிறது. ஸ்வதர்மத்தைக் காப்பாற்றுவதில் இறந்து விட்டாலும் பெரிதில்லை என்று ரீகிருஷ்ண பகவான் பகவத் கீதையில் சொல்லுகிறார். ஆனால் இங்ஙனம் உயிரினும் அருமையாகப் போற்றுவதற்குரிய கடமைகளும் அல்லது தர்மங்களும் அர்த்தமற்றனவும் எலத்தில்லாதனவு மாகிய வெற்று வழக்கங்களுக்கும்பேதமில்லாமல் நீங்கள்மருட்சி கொண்டு வினே துயரம் படலாகாது என்று விவரித்து பல அனுபவங்களையும் எடுத்துக் காட்டிப் பேசுகிறார்.

ஒளவையார் பற்றி

உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லம் நீதி ஆண் மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மாதரும் ராஜ நீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே போதுமான ஆண் சட்டத்துக்குக் கீழ் பட்டிருந்தனரேயாயினும் ஜன சமூக நீதிகளின் விஷயத்தில் தமிழ்நாட்டில் எப்போதும் பிரமாணமாக . இயன்று வருவநது ஒளவையின் நீதி வாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண் மக்களிலே கூட உயர்ந்த கல்வி பயின்றோர் மாத்திரமே ஜன சமூக விநாயகங்களில் வள்ளுவர் குறள் நாலடியார் முதலியவற்றை பிரமாணமாகக் கூறுவர். அதிகப்படிப்பில்லாதவர்களும் படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள்.ஆண், பெண் அனைவ்ருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி தமிழ் ஜனங்களில் பெரும்பான்மையோருக்குச் சுமார் இரண்டாயிரம் வருஷங்களாக ஒளவையாரின் நீதியே பிரமாணமாக நடைபெற்று வருகிறது.

  • சாமான்ய ஜனங்கள் ஒளவை நீதியைக் கொண்டாடி வருகிறாார் களெனில் கற்றோரும் அரசரும் அதைப் புறக்கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள் நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அதிகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால் இந்த நீதி

71