பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பங்களுக்கு ஹேது வாய்விடுமாகையாலும் தீ வினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயருக்குரிய தென்று ம் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக்களஞ்சியமே ஆகுமென்றும் ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் என்று மகாகவி விவரித்துக் கூறுகிறார்.

இனி இன்பத்துக்கு ஒளவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற பண்புட்ையது. காதல் இன்பத்தையே முன்னோர் இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளை சேர்ப்பதிலும் அறிக்கை செய்வதிலும் தனித்தனியே பல வகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும் இவை காதல் இன்பத்துக்குத் துணைக் கருவிகளாவது பற்றியே ஒருவாறு இன்பங்களென்று கூறித்தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களை உண்டல், நல்ல பாட்டுக்கேட்டல் நல்ல மலர்களை முகர்தல் முதலில் இந்திரிய இன்பங்களை விரும்பி அவற்றினை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிறார்கள். அதிகார இன்பம் புகழின்பம் முதலில் எண்ண நிற வேறு பல இன்பங்களுக்காகவும் உழைக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் அற்பமான இனங்களென்று கருதி முன்னோர் இவற்றை இன்பப்பாலிலே சேர்க்க வில்லை. புகழதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணிக்கிறார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பகrணங்களையும் கனிகளையும் உண்டல், மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக்கூடியனவும் வெறுமே சரீர சுகமாத்திரமின்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகாரமில்லாதனவுமாதல் பற்றி அவற்றையும் இன்பப் பாலிலே சேர்க்கவில்லை. -

‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்துற்றறியும்

இவ்வைந்தும் ஒண்டோடிக் கண்ணே உள’ என்று

‘கண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் என்ற ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே தானுள்ளது’ என்பது அக்குறளின் பொருள். இதனுடன் உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்ப மனிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களனைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால் நான்கு புருஷார்த்தங்கள். அதாவது மனிதப்பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும்பயன்களைக் கணக்கிடப் புகுந்தவிடத்து நம் முன்னோர் காதலன் பத்தையே இன்பமென்னும் பொதுப் பெயரால் சொல்லியிருக்கிறார்கள். இங்ஙனம் இன்பமென்ற பொதுப் பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ்சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகுமென்பதையும் அவ்வின்பத்தை தவறு தலின்றி நுகர்தற்குரிய வழியின்னதென்பதையும் ஒளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச் சொற்களிலே காட்டி அருள்

75