பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமையாலும் ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்தியினாலும் அதைக் காப்பாற்றக்கூடிய திறமையை உங்களுக்குப் பரப்பிரம்மம் அருள் செய்க” என்று மகாகவி எழுதி முடிக்கிறார்.

இந்த வார்த்தைகளிலிருந்து ஒளவைப் பிராட்டியின் பெருமைகளையும் பெண்ணினத்தின் பெருமைகளையும் மகாகவி பாரதி எவ்வளவு உயர்த்தி பேசுகிறார் என்பதைக் காண் முடிகிறது. மகாகவி பாரதி, பெண்ணினத்தைப் பற்றிப் பல இடங்களிலும் பெருமைப்படுத்திப் பேசுவதைக் காண்கிறோம்.

கதைகள

  • மகாகவி பாரதியாரின் உரைநடையில் கதைகளும் ஒரு பகுதியாகும்.

அவருடைய கதைகளும் கற்பனைகளும் வர்ணனைகளும்

அற்புதமானவைகளாகும் சிந்திக்கத்தக்கனவாகும்.

ரெயில்வே ஸ்தானம் என்னும் ஒரு கதை பாரதி எழுதியிருக்கிறார். அதன் வர்ணனை அற்புதமாக உள்ளது. அத்துடன் அக்கதையில் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்திருக்கிறார். அது மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். இன்றைய நிலைமைக்கு அக்கருத்து மிகவும் பொருத்தமானதும் சிந்திக்கத்க்கதுமாகும்.

கதையின் ஆரம்பம் அதன் வர்ணனை

வஸந்த காலம் காலை நேரம். தென்காசி ஸ்டேஷன் இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. அது திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கே இரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்தி பெற்ற குற்றத்தருவி வருகிறது பக்க மெல்லாம் மலையகரி சாரல் கொஞ்சம் மேற்கே போனால் செங்கோட்டை ஸ்டேஷன் முதல் திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும் இரண்டு பக்கங்களிலும் செங்குத்தான மலைகளும் ஆழமான பள்ளங்களும் மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச் செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப் புழைகளும் இருபாரிசத்திலும் இயற்கையாய் பச்சை உடுத்து, சால மிகப் பெருஞ்செழிப்புடனே களி கொண்டு நிற்கும் பலவகைப்பட்ட வணக்காகூவிகளும் ஒரு முறை பார்த்தால் பிறகு எக்காலத்திலும் மறக்க முடியாதன. i

இது மகாகவி பாரதி இயற்கையைப் பற்றிக் கூறும் அற்புதமான வர்ணனையாகும். மேலும் எழுதுகிறார்,

‘இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில் காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப் போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண நவதீகர் நீர்க்காவி அழுக்கு நிறமாக ஏறிப்

77