பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது போலவே பொருள் இன்பம், வீடு என்னும் சொற்களுக்கும் விரிவான பொருள் அமைந்திருக்கிறது. இவை இந்து தர்மத்தின் சிறப்பாகும். இவைகளை விரிவுப்பட விளக்க வேண்டும்.

மகாகவி பாரதி மிகவும் சுருக்கமாகவும் ஆழ்ந்த கருத்துடனும் இவைகளை விளக்குகிறார்.

இந்துக்களின் சிறப்பு

இத்தலைப்பில் மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

லகஷ்மி தேவி எந்த இடத்திலம் ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும் அதனால் உண்டான பெருமையும் ஒரு கூட்டதாரிடையே குறைவு படும் போது உட்பொறாமையும் மாற்சரியமும் வெளிப்பட்டுதலை தூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.

இந்துக்களின் சிறப்பு

ஆனால் இவ்விஷயத்தில் கூட மற்ற தேசத்தாரைக் காட்டிலும் ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகிறது. ஏனென்றால் ஹிந்துக்களிடம் தெய்வ பக்தி என்ற சிறந்த குணம் மற்றெல்லா தேசத்தாரைக்காட்டிலம் அதிகமென்பதை மேற்குப்பக்கத்துப் பண்டிதரிலே கூட பகடிபாத மற்ற பல லோக்கியர் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வ பக்தியினால் ஜீவதயை உண்டாகிறது.

“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

யல்லாமல் வேறொன்றியேன் பராபரமே’

என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார் என்று பாரதியார் விளக்கிக் கூறுகிறார்.

மகாகவி மேலும் எழுதுகிறார். சென்ற கார்த்திகை மாதம் புயற்காற்று அடிப்பதைப் பற்றி தென்னாற்காடு ஜில்லாவைச் சோதனை செய்த சர்க்கார் அதிகாரியான ஒர் ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில் ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதயை, அதிதி ஸ்திகாரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்து இரவில் சில வைதீ'பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடம் கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மை சூழ்ந்திருப்போர் சிவனுடைய னங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராச்சாரியாருக்கு சமத்துவ குணத்தை ஊட்டினார். ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக்குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியகின் முதுகிலே சுமந்து கொண்டு வந்து

84