பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுவோரே “முதல் தர வித்துவான்’. இந்தக் கீர்த்தனங்களெல்லாம் சமஸ்க்ருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே முக்காலே மும்மாகாணி ‘வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு ரஸம் தெரிய நியாயம் இல்லை.

புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டு வர வேண்டும். இப்போது சங்கீத வித்வான்களிலே தலைமைப்பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும். நவரசங்களின் தன்மைகளையும் இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். -

“பூர்வ காலத்து மஹான்களுக்குத் தெய்வப் பிரலாத மிருந்தது. எங்களுக்கில்லையே என்ன செய்வோம்? என்று புதிய வித்வான்கள் புதிய கீர்த்தனங்கள் அமைப்பதிலே பின் வாங்கக்கூடாது. தெய்வங்கள் இறந்து போகவில்லை. இப்போதும் அவற்றை உபாசனை செய்து அவற்றின் அருள் பெறலாம். தெய்வப்பிரசாதத்தை ஒருவன் பக்தியாலும், ஜீவ தயையாலும், நேர்மையாலும், உண்மையாலும் இடைவிடாத உழைப்பினாலும் சம்பாதிக்க முடியும்’ என்று மகாகவி எழுதுகிறார்.

மகாகவி மேலும் எழுதுகிறார், முத்துசாமி திசுஷிதர், தியாகய்யர், பட்டணம் சுப்ரமணிய அய்யர். இந்த மூன்று பெயருடைய கீர்த்தனங்களைத் தான் வழக்கத்தில் அதிகமாய்ப்படுகிறார்கள். இவற்றுள்ளே தீrதரின் கீர்த்தனைகள் பீச்சை ஸம்ஸ் கிருத பாஷையில் எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப் போல கம்பீரநடையும் பெருந்தன்மையும் உடையன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்த போதிலம் சம்ஸ்க்ருத பாஷையிலே எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டு பொது ஜனங்கள் ரஸ்ானு பாவத்துடன் பாடுவதற்குப் பயன்பட மாட்டா.

தியாகராய்யர் தெய்வ வரம் பெற்றவர். தியாகய்யர் ரஸ் க் கடல். கர்நாடக சங்கீதம் இப்போது உயிர் தரித்திருப்பதற்கு அவரே காரணம். பூர்வ காலத்து ஞானிகளைப் போல இவர் இஷ்ட தேவதைக்கு ஆத்ம யக்ஞம் செய்துதான் கற்று வித்தை வடிவாகி விளங்கினார். இவருடைய பாட்டுக்களை இக்காலத்துப் பாடகர்அதிக சங்கதிகளாலும், ரஸ் நாசத்தாலும், சொற்களைத் திரித்தல், விழுங்குதல் முதலிய செய்கைகளாலும் இயன்றவரை ஆபாசமாகி விட்டபோதிலும் இன்னும் அவற்றிலே பழைய ஒளி நிற்கத்தான் செய்கிறது. குப்பையிலே கிடந்து மாசேரி ஒளி மங்கிப் போயிருந்த போதிலும், மாணிக்கத்தின் குணம் ரத்ன பரீட்சைக்காரனுக்குத் தெரியாதா? அது போலவே ரஸ உண்மை தெரிந்தோர் இத்தனை குழப்பத்துக்கிடையே தியாகய்யருடைய தொழிலின் ஸ்வரூபத்தை நன்கு கண்டு பிடித்துக் கொள்ள

94