பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தை விஷயத்தில் கூச்சங்காட்ட நியாயமில்லை. வித்தைப் பயிருக்கு விடுதலை நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் பெண்களுக்குள்ளே பொதுக்கல்வியை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்க வேண்டும். கல்வியறிவில்லாத மூடர் எந்தத் தொழிலிலும் நேரே செய்ய மாட்டார்கள் . தவிரவும் பாரிஸ் மெட்டிலே ஆர்த்தி எடுப்பது இங்கிலிஷ் நலங்கு முதலிய கோரமான விகாரங்களுக்குத் துணை செய்யக்கூடாது. நமது நாடக காலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும் நாகரிகமும் துழையும் காலம் வரை நமது பெண்கள் நாடகப்பாட்டுக்களை கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்.

அபிநயம்

கூத்திலே அபிநயமே பிரதானம்

தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல் அபிநயமே கூத்தின் உயிர் தாளந்தவறாமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது. --

பாகவதர் ஒருவர் வேதபுரத்தில் நந்தனார் சரித்திரம் நடத்தினார். நந்தன் அடிமை ஐயர்ஆண்டைஐயருக்கு முன்னே நந்தன் போய் நிற்கிறான். “நைச்ய பாவம் என்றது. நைச்யத் தோற்றம். நைச்யம் என்பது நீசன் என்ற சொல்லடியாகத் தோன்றி நீசத்தன்மை என்று பொருள்படும் குணப் பெயர். இங்கு நீசன் என்பது அடிமை. எனவே நைச்ய பாவமென்றால் அடிமைத் தோற்றம். இதை அந்தப் பாகவதர் அபிநயங்களால் காட்டினார். நிரம்ப நேர்த்தியான வேலை செய்தார். புருவத்தை அசைக்கிற மாதிரிகளும் கடைக்கண் காட்டுகிற மாதிரிகளும் தோளையும் வயிற்றையும் குலுக்குகிற மாதிரிகளும் மெல்ல மெல்ல பாகவதருடைய அபிநயங்கள் பக்தி ரஸ்த்திலிருந்து சிருங்கார ரஸத்தின் தோரணைகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்படி சிருங்காரத்தின் அபிநயங்களிலேயும் மேற்படி பாகவதர் குற்றமில்லை. புருவமும் கடைக்கண் முதலியவற்றை மிகத் திறமையுடன் வெட்டுகிறார். சிருங்காரரஸத்திற்கு ‘பாவம் ரதி, சந்திரன் சந்தனம் முதலிய உத்தீபனங்கள் அல்லது தூண்டுதல்கள் என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது. மேற்படி பாகவதர் சந்திரன் முதலியவற்றைக் கண்ணாலே குறிப்பிடுகிறார்.

ஆனால் இவர் புருஷராக இருந்தும் புருனுாபிநயங்கள் குறைவாகவும் நாயிகாபிநயங்கள் அதிகமாகவும் கற்றிருக்கிற விந்தை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நைச்ய பாலத்திலே அதாவது அடிமைத் தோற்றம் காட்டுவதிலே கூட இவர் இந்தப் பெண்மையைக் கலப்பதனால் அதிக சிரமம் ஏற்படுகிறது. ஆண்டையின் முன்னே வந்து நிற்கும் நந்தன் பறை பாதியும் தாஸி, பாதியுமாகக் காட்டுகிறார்.

98