பக்கம்:மணி பல்லவம் 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

மணிபல்லவம்


இரண்டு பொருளுக்கும் உரியதாக வாய்த்த போது என்ற சொல்லின் அழகு புரியும். சமயம் அறிந்து, இடம் அறிந்து, பொருத்தம் அறிந்து மலரும் அறிவின் மலர்ச்சி யைப் பூக்களும் இணை சொல்வது இதனால்தான் முல்லை! உன்னைப் போன்ற பெண்களுக்கோ ஆசை நேரும்போதுதான் அறிவும் மலர்கிறது. ஆசையைச் சொல்வதற்கு வேண்டிய சொற்களை மட்டும்தான் நீங்கள் தேடுகிறீர்கள்.”

"அதை மறுப்பதற்குத் தேவையான அழகிய சொற்களைத் தேடாமலே தெரிந்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்...' -

இப்படி வெடுக்கென்று உடனே அவனுக்குப் பதில் சொன்னாள் முல்லை. அவளுடைய சொற்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பிறந்ததைக் கண்டு இளங்குமரன் புன் முறுவல் பூத்தான். எதிரேயிருப்பவர் கூறிய கருத்து எதுவோ அதை உடனே மறுத்துவிட வேண்டுமென்ற அவசரமும் அவளுடைய இந்தச் சொற்களில் தொனித்தது. முல்லையின் மனத்தில் இப்போது இன் னொரு சந்தேகமும் ஏற்பட்டது. பூக்களைப் போல் சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின்பு வாடி உதிர்ந்து தளர்வதும், குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம்' என்று இளங்குமரன் கூறியது தன்னைப் பற்றியா, அவனைப் பற்றியா எனச் சந்தேகத்தை இரண்டு கூறாகப் பிரித்து மனத்தைக் குழப்பிக் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகத்தை அவனிடமே கேட்டுப் புரிந்து கொள்ளலாம் என்றால் இதை அவனிடம் எப்படிக் கேட்பது என்றும் அவள் விளங்கிக்கொள்ள முடியாமல் பயந்தாள்.

இளங்குமரனோ தன் எதிரே நிற்பவளுடைய பெண் இதயத்தின் எல்லா வேதனைகளையும் உணர்ந் திருந்தும் ஒன்றுமே உணராததுபோல இளநகை தயங்கும் முகத்தினனாக நின்றான். அவன் இதழ்களிலும் முகத்திலும் தோன்றிய அந்தப் புன்னகையும் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/124&oldid=1144513" இலிருந்து மீள்விக்கப்பட்டது